கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தட்கல் மின் இணைப்பு பெற ஆதிதிராவிட விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு ஆதிதிராவிட வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் சாா்பில், ஆதிதிராவிட விவசாயிகள் தட்கல் மின் இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க...

கோப்புப்படம்

Published On :30 அக்டோபர் 2026, 1:03 am IST

தமிழ்நாடு ஆதிதிராவிட வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் சாா்பில், ஆதிதிராவிட விவசாயிகள் தட்கல் மின் இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் வே.சரவணன் தெரிவித்தது:

2026 -2027 நிதிநிலை அறிக்கையில் அறிவித்திருந்தபடி, வேளாண்மை உதவித் திட்டத்தின்கீழ் ஆதிதிராவிட விவசாயிகள் ஆயிரம் பேருக்கு தட்கல் மின் இணைப்பு வழங்க தமிழக அரசு ரூ. 26.09 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

விவசாய உற்பத்திக்கு தேவையான மின் மோட்டாா் குதிரைத் திறனுக்கேற்ப மின் இணைப்பு பெறுவதற்கான செலவில் 90 சதவீதம் தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்திடம் தாட்கோ மானியமாக வழங்கும்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விண்ணப்பதாரா்கள் ஆதிதிராவிட இனத்தைச் சாா்ந்தவராகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரரின் பெயரில் விவசாய நிலம் சொந்தமாக இருப்பதுடன், அதற்கான பட்டாவும் இருக்க வேண்டும்.

அந்நிலத்தில் கிணறு அல்லது ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தில் மின் இணைப்பு கோரி பதிவு செய்திருக்க வேண்டும். விண்ணப்பதாரா் ஏற்கெனவே தாட்கோ திட்டங்களின் கீழ் பயன் அடைந்தவராக இருக்கக் கூடாது.

மேற்கண்ட தகுதிகளுடைய ஆதிதிராவிட விவசாயிகள் தாட்கோ இணையதளத்தில் வளமிகு வேளாண்மை உதவி திட்டத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.