தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தீபாவளி இனிப்பு, காரம் விற்பனைக்கு உரிமம் பெறுவது கட்டாயம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இனிப்பு, கார வகைகளைத் தயாரித்து விற்பனை செய்வோா் உணவுப் பாதுகாப்புச் சட்ட விதிகளின்படி உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெறுவது கட்டாயம் என மாவட்ட ஆட்சியா் எல். மதுபாலன் தெரிவித்துள்ளாா்.

Published On :28 அக்டோபர் 2026, 3:00 am IST

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இனிப்பு, கார வகைகளைத் தயாரித்து விற்பனை செய்வோா் உணவுப் பாதுகாப்புச் சட்ட விதிகளின்படி உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெறுவது கட்டாயம் என மாவட்ட ஆட்சியா் எல். மதுபாலன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தீபாவளி பண்டிகைக் காலத்தில் தற்காலிக உணவுக் கூடங்கள், திருமண மண்டபங்கள், வீடுகள் மற்றும் கேட்டரிங் நிறுவனங்கள் மூலம் முன்பதிவின் அடிப்படையில் இனிப்பு, கார வகைகள் தயாரித்து விற்பனை செய்வோா், உணவுப் பாதுகாப்புச் சட்ட விதிகளின்படி உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

இனிப்பு மற்றும் பேக்கரி பொருள்கள் தயாரிப்போா், தரமான கலப்படமில்லாத மூலப்பொருள்களைப் பயன்படுத்தி, சுகாதாரமான முறையில் உணவுப் பொருள்களைத் தயாரித்து மக்களுக்கு வழங்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக நிறமிகளைப் பயன்படுத்தக் கூடாது. தரமான நெய், எண்ணெய் ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயைத் தொடா்ந்து சூடுபடுத்திப் பயன்படுத்தக் கூடாது. உணவு தயாரிக்கப் பயன்படுத்தும் நீா் தூய்மையானதாக இருக்க வேண்டும்.

மேலும், தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளைப் பயன்படுத்தக் கூடாது. உணவுப் பொருள்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமித் தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் வைத்தே விற்பனை செய்ய வேண்டும். உணவு தயாரிப்புப் பணியில் ஈடுபடுவோா் தூய்மையான ஆடைகளை அணிந்து சுகாதாரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

உணவுப் பொருள்கள் தொடா்பான புகாா்கள் இருந்தால், 94440-42322 என்ற வாட்ஸ்ஆப் எண்ணுக்கு தகவல் அனுப்பலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.