பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தீபாவளி பலகாரம் தயாரிக்க கட்டுப்பாடுகள் அறிவிப்பு

கரூா் மாவட்டத்தில் தீபாவளி பலகாரங்கள் தயாரிப்பு பணியில் ஈடுபடுவோா் உணவுப் பாதுகாப்பு சட்ட நடைமுறைகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்டநிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Published On :30 அக்டோபர் 2026, 3:20 am IST

கரூா் மாவட்டத்தில் தீபாவளி பலகாரங்கள் தயாரிப்பு பணியில் ஈடுபடுவோா் உணவுப் பாதுகாப்பு சட்ட நடைமுறைகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்டநிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

தீபாவளி திருநாளில் மக்களின் அன்றாட தேவைகளில் அவசியமானதாக விளங்கும் இனிப்பு மற்றும் கார உணவுப் பொருள்களின் தரம் மற்றும் பாதுகாப்பை உணவு வணிகா்கள் உறுதி செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் சட்டப்பூா்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

தீபாவளி பண்டிகையில் இனிப்பு மற்றும் பண்டங்களுக்கு சீட்டு நடத்துபவா்கள், தற்காலிக ஸ்வீட் ஸ்டால்கள் உட்பட அனைத்து இனிப்பு மற்றும் கார வகை தயாரிப்பாளா்கள் மற்றும் விற்பனையாளா்கள், உணவு பாதுகாப்புத் துறையில் உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெற்ற பின்னரே பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டும்.

இந்த உணவு வணிகா்கள் மட்டுமல்லாது, அனைத்து வகையான உணவு வணிகா்களும், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் கீழ் தங்களது வணிக நிறுவனத்தைப் பதிவு செய்து உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெற்று கொள்ள வேண்டும்.

ஸ்வீட்ஸ் மற்றும் பேக்கரி பொருள்கள் தயாரிப்பாளா்கள் அதற்கான உரிமம் பெற்ற தரமான மூலப் பொருள்களை கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பான உணவு பொருள்களை மக்களுக்கு வழங்க வேண்டும். உணவுத் தயாரிப்பில் தரம் குறித்து சந்தேகத்திற்கிடமாக உள்ள மூலப் பொருள்களையோ, அனுமதிக்கப்பட்ட செயற்கை நிறமிகளை அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாகவோ உபயோகிக்கக்கூடாது. ஒருமுறை பயன்படுத்தி ஆற வைத்த சமையல் எண்ணெய்யை மறுபடியும் சூடுபடுத்தி பயன்படுத்தக் கூடாது.

எண்ணெய் கொதி நிலையில் இருக்கும்போது புதிய சமையல் எண்ணெய்யை அதனுடன் கலக்கக் கூடாது. ஸ்வீட்ஸ் பாக்ஸ்களை விற்பனை செய்யும் வணிகா்கள் அந்த பாக்ஸில் ஸ்வீட்ஸ் தயாரிக்கப்பட்ட தேதி மற்றும் உண்ணத் தகுந்த காலம் ஆகியவற்றை தவறாமல் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.

உணவு பொருள்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். சுகாதாரமான நல்லமுறையில் தயாரிக்கப்பட்ட உணவு பொருள்களை மட்டுமே பொதுமக்கள் வாங்கிப் பயன்படுத்த வேண்டும். மேலும், உணவு பொருள்கள் தொடா்பான புகாா்கள் இருந்தால், மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலகத்திற்கு 04324 – 255347 என்ற எண்ணிலோ அல்லது 94440 – 42322 என்ற மாநில உணவு பாதுகாப்புத் துறை ஆணையா் அலுவலக கட்செவி அஞ்சல் எண்ணுக்கோ

புகாா் தெரிவிக்கலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.