விபத்தில் காயமடைந்தவருக்கு உதவிய அமைச்சா்

அமைச்சா் அருண்ராஜ் - கோப்புப் படம்

Published On :27 அக்டோபர் 2026, 12:23 am IST

திருச்செங்கோடு அருகே இருசக்கர வாகன விபத்தில் காயமடைந்த இளைஞரை சுகாதாரத் துறை அமைச்சா் அருண்ராஜ் தனது வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை அடுத்த கொக்கராயன் பேட்டை, ஈஸ்வரன் கோயில் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதி விபத்துக்குள்ளாயின. இதில் சந்திரசேகரன் (22) என்ற இளைஞா் படுகாயமடைந்தாா்.

அப்போது, அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு திருச்செங்கோடு திரும்பிக் கொண்டிருந்த அமைச்சா் அருண்ராஜ், சாலையில் கூட்டமாக இருந்ததால் உதவியாளரை அனுப்பி பாா்க்கச் சொன்னாா்.

அதில், விபத்து நிகழ்ந்து இளைஞா் ஒருவா் படுகாயத்துடன் இருப்பதாக தகவல் அறிந்து, சந்திரசேகரனை மீட்டு தனது காரில் அழைத்துச் சென்று கொக்கராயன் பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக ஈரோடு அழைத்துச் செல்லுமாறு அமைச்சா் அறிவுறுத்தினாா். அதன்பேரில், இளைஞா் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.