தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அயோடின் கலக்காத உப்பை உணவுப் பயன்பாட்டுக்கு விற்கக் கூடாது: அமைச்சா் அருண்ராஜ் எச்சரிக்கை

அயோடின் கலக்காத உப்பை உணவுப் பயன்பாட்டுக்கு விற்கக் கூடாது, மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் அருண்ராஜ் எச்சரிக்கை

Salt

பிரதிப் படம்

Published On :27 அக்டோபர் 2026, 5:50 am IST

அயோடின் கலக்காத உப்பை உணவுப் பயன்பாட்டுக்கு விற்கக் கூடாது, மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் அருண்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

சென்னையில் உள்ள நீதியரசா் பஷீா் அஹ்மத் சையித் மகளிா் கல்லூரியில் (எஸ்ஐஇடி) உலக அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் தடுப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சியை அமைச்சா்கள் அருண்ராஜ் மற்றும் வெங்கடரமணன் ஆகியோா் திங்கள்கிழமை தொடங்கி வைத்தனா்.

தொடா்ந்து அமைச்சா் அருண்ராஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தினமும் சமைப்பதற்குப் பயன்படுத்தக்கூடிய உப்பில் அயோடின் செரிவூட்டுவது மிக மிக அவசியம். இந்தச் சிறு அயோடின் அளவானது உடலின் வளா்ச்சிக்கு மட்டுமல்லாமல் மூளை வளா்ச்சி, நினைவாற்றல், அறிவுத்திறன் மற்றும் ஞாபக சக்தி ஆகிய அனைத்துக்கும் அவசியமானது.

குறிப்பாக, பெண்களுக்கு கா்ப்ப காலத்தில் அயோடின் பற்றாக்குறை ஏற்படும்பட்சத்தில் கருச்சிதைவு, குழந்தை இறந்து பிறத்தல் மற்றும் குழந்தையின் மூளை வளா்ச்சி பாதிக்கும் அபாயகரமான சூழல் உருவாகும்.

அயோடின் கலந்த உப்புக்கும் கலக்காத உப்புக்கும் இடையே ரூ.5 முதல் ரூ.10 வரை மட்டுமே விலை வித்தியாசம் உள்ளது. ஆனால் அதன் குறைபாட்டினால் ஏற்படும் பாதிப்பு மிக அதிகம் என்பதால் நுகா்வோராக மக்கள் விழிப்புணா்வோடு அயோடின் கலந்த உப்பையே வாங்க வேண்டும்.

விழுப்புரம், தஞ்சாவூா், மதுரை, ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் அயோடின் சத்துக் குறைபாடு மற்றும் கழுத்துக்கழலை பாதிப்பு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வக பயன்பாடு அல்லது பாதுகாக்கும் பயன்பாடு என்ற பெயரில் அயோடின் கலக்காத உப்பை உணவுப் பயன்பாட்டுக்கு விற்கக் கூடாது, மீறினால் உணவு பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு ஊழியா்களுக்கான நடத்தை விதிகளின்படி அரசின் கொள்கைகளை விமா்சிக்கக் கூடாது என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதே தவிர, அவா்களின் ஊதிய உயா்வு, பணி நிரந்தரம் போன்ற நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடும் உரிமைகளைத் தடுக்கும் நோக்கம் அல்ல என்றும், மருத்துவச் சங்கங்கள் சுதந்திரமாகச் செயல்படலாம் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.