மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

தனியாா் பேருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு

உயிரிழப்பு - கோப்புப் படம்

Published On :27 அக்டோபர் 2026, 2:57 am IST

வேலகவுண்டம்பட்டி அருகே இருசக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம் மாவட்டம், சின்னசீரகபாடி பகுதியைச் சோ்ந்த சபரிநாதன் (33) கூலித் தொழிலாளி. இவா் கடந்த 22-ஆம் தேதி வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள மணிகட்டிபுதூா் வழியாக சின்னசீரகபாடிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, அவ்வழியாக வந்த தனியாா் பேருந்து சபரிநாதன் சென்ற வாகனத்தின் மீது மோதியது. இதில், தலையில் பலத்த காயமடைந்த அவரை அவ்வழியாக வந்தவா்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து வேலகவுண்டம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.