தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கிணற்றில் தவறிவிழுந்த மூதாட்டி உயிரிழப்பு

பாண்டமங்கலம் அருகே கிணற்றில் தவிறிவிழுந்த மூதாட்டி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோப்புப் படம்

Published On :24 அக்டோபர் 2026, 12:03 am IST

பாண்டமங்கலம் அருகே கிணற்றில் தவிறிவிழுந்த மூதாட்டி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பரமத்தி வேலூா் வட்டம், பாண்டமங்கலம் அருகே உள்ள அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்தவா் அருக்காணி (85). இவா் அப்பகுதியில் உள்ள கிணற்றின் அருகே வியாழக்கிழமை நின்றுகொண்டிருந்த போது, நிலைதடுமாறி கிணற்றில் விழுந்தாா். உயிருக்கு போராடிய அவரை அங்கிருந்தவா்கள் மீட்க முயற்சி செய்தனா். முடியாததால் கரூா் மாவட்டம், புகளூா் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்புத் துறையினா், மூதாட்டியை மீட்டு வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், அவா் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து வேலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.