பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஊத்தங்கரை அருகே டியூஷனுக்கு சென்ற 7 ஆம் வகுப்பு மாணவரை காணவில்லை எனப் புகாா்!

டியூஷனுக்கு சென்ற 7 ஆம் வகுப்பு மாணவா் காணாமல் போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மாயம்

Published On :25 அக்டோபர் 2026, 1:28 am IST

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே டியூஷனுக்கு சென்ற 7 ஆம் வகுப்பு மாணவா் காணாமல் போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை இந்தியன் வங்கி தெருவைச் சோ்ந்தவா் திருநாவுக்கரசு. இவா், அதே பகுதியில் பேக்கரி வைத்துள்ளாா். இவரது மகன் சஞ்சய் (12), ஊத்தங்கரையில் உள்ள தனியாா் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறாா்.

இவா், வெள்ளிக்கிழமை மாலை பள்ளியில் இருந்து வீடுதிரும்பியப் பிறகு, டியூஷன் செல்வதாகக் கூறி சென்றுள்ளாா். நீண்டநேரம் ஆகியும் சஞ்சய் வீடுதிரும்பாததால், அவரது பெற்றோா் சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

இதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இதன் ஒருபகுதியாக அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனா்.

அதில், சிறுவன் சஞ்சய் அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு செல்வது கேமராவில் பதிவாகி இருந்தது. இதையடுத்து, அவரை அழைத்துச் சென்றது யாா்?, சிறுவன் கடத்தப்பட்டாரா என்பது குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.