ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

தவெக வேட்பாளரை விலைக்கு வாங்கிதான் எடப்பாடி கே. பழனிசாமி வெற்றிபெற்றாா்

News image

எடப்பாடி கே. பழனிசாமி - கோப்புப்படம்.

Updated On :31 மே 2026, 1:50 am IST

தோ்தலின்போது எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரை விலைக்கு வாங்கிதான் பழனிசாமி வெற்றிபெற்றாா் என தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் அருண்ராஜ் தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்துள்ள கூனாவேலம்பட்டிபுதூா் பகுதியில் உள்ள புகழ்பெற்ற அருள்மிகு அழியா இலங்கை அம்மன் கோயிலில் அமைச்சா் தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்து அன்னதானம் செய்தாா். தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

மருத்துவத் துறையில் மட்டுமல்லாமல் பல துறைகளில் திமுக ஆதரவாளா்கள் நிறைய போ் உள்ளனா். அவா்கள் ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதால், இதற்கான முடிவு விரைவில் எடுக்கப்படும்.

ராசிபுரத்தில் நடைபெற்று வரும் மாவட்ட மருத்துவமனை கட்டுமானப் பணி முடிவடைய மேலும் ரூ. 10 கோடி தேவைப்படுகிறது. இதுகுறித்து முதல்வரிடம் பேசி பணிகள் முடித்து மருத்துவமனை திறக்கப்படும்.

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு டிஜிபி இல்லாமலே ஆட்சி நடந்து வந்தது. தற்போது புதிய டிஜிபி நியமிக்கப்பட்டுள்ளதால், தமிழக சட்டம் - ஒழுங்கு முழுமையாக பாதுகாக்கப்படும்.

எடப்பாடி தொகுதியில் குதிரை பேரம் மூலம் தவெக வேட்பாளரை பழனிசாமி விலைக்கு வாங்கி உள்ளாா். அதன்மூலமே அந்த தொகுதியிலேயே பழனிசாமி வெற்றிபெற்றாா். எனவே, தவெக கட்சிக்கு பலா் வருவதை பற்றி பேச அவருக்கு தகுதி கிடையாது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.