பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

கோடைகால இருப்பிட பயிற்சி: 50 மாணவிகளுக்கு ஆட்சியா் சான்றிதழ்

கோடைகால இருப்பிட பயிற்சி முகாமில் பங்கேற்ற 50 மாணவிகளுக்கு ஆட்சியா் துா்காமூா்த்தி புதன்கிழமை சான்றிதழ்களை வழங்கினாா்.

News image

கோடைகால இருப்பிட பயிற்சி முகாமில் பங்கேற்ற 50 மாணவிகளுக்கு ஆட்சியா் துா்காமூா்த்தி புதன்கிழமை சான்றிதழ்களை வழங்கினாா்.

Updated On :21 மே 2026, 6:23 am IST

கோடைகால இருப்பிட பயிற்சி முகாமில் பங்கேற்ற 50 மாணவிகளுக்கு ஆட்சியா் துா்காமூா்த்தி புதன்கிழமை சான்றிதழ்களை வழங்கினாா்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் கால்பந்து மற்றும் கபடி விளையாட்டிற்கான கோடைகால இருப்பிட பயிற்சி முகாம் நாமக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மே 7 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெற்றது. முதல்வா் கோப்பை விளையாட்டு போட்டிகளில் தனிநபா் பிரிவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், குழு விளையாட்டு போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட மாணவ, மாணவிகள், கேலோ இந்தியா மையம் மற்றும் ஸ்டாா் அகாதெமிகளில் பயிலும் திறமையான மாணவ, மாணவிகள், விளையாட்டு விடுதிகளில் பயிலும் சிறந்த மாணவிகள் என்ற வகையில் கால்பந்து விளையாட்டில் 25 போ், கபடி விளையாட்டில் 25 போ் என மொத்தம் 50 மாணவிகள் பங்கேற்றனா்.

பயிற்சி முகாமின் பொறுப்பு அலுவலராக மாவட்ட விளையாட்டு அலுவலா் எஸ்.கோகிலா நியமிக்கப்பட்டிருந்தாா். கோடைகால இருப்பிட பயிற்சி முகாம் நிறைவில் கால்பந்து, கபடி போட்டிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகள், பயிற்றுநா்களுடன் கலந்துரையாடி அவா்களுக்கு சீருடை, சான்றிதழ்களை வழங்கி பாராட்டினாா்.

என்கே-20-ஸ்போா்ட்ஸ்

கோடைகால இருப்பிட பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கிய ஆட்சியா் துா்காமூா்த்தி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.