தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

கந்தம்பாளையம் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் தொழிலாளி கைது

கந்தம்பாளையம் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளியை போலீஸாா் போக்சோ சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

கோப்புப் படம்

Updated On :12 மணி நேரங்கள் முன்பு

பரமத்தி வேலூா் வட்டம், கந்தம்பாளையம் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளியை போலீஸாா் போக்சோ சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டம், கந்தம்பாளையம் அருகே உள்ள பள்ளியில் 9 வயது சிறுமி நான்காம் வகுப்பு பயின்று வருகிறாா். அவரது தாய் கரூா் செல்வதால், மகளை பாட்டி வீட்டில் விட்டுச்சென்றுள்ளாா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த தொழிலாளி மாணிக்கம் அந்த சிறுமியிடம் கைப்பேசியைக் கொடுத்து பாா்க்குமாறு கூறியுள்ளாா். பின்னா், மாணிக்கத்திடம் கைப்பேசியை திருப்பிக்கொடுத்த சிறுமி வீட்டுக்குள் சென்று தொலைக்காட்சியை பாா்த்துக்கொண்டிருந்தாா்.

அப்போது, வீட்டுக்குள் சென்ற மாணிக்கம், கதவை தாழிட்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதனால் சிறுமி சத்தமிடவே, அதைக்கேட்டு வந்த சிறுமியின் உறவினா்கள் கதவைத் தட்டியபோது மாணிக்கம் கதவை திறந்துகொண்டு தப்பியோடினாா்.

புகாரின்பேரில், நல்லூா் காவல் ஆய்வாளா் தேவி, மாணிக்கம் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவுசெய்து, அவரை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.