முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

தோ்தல் நடத்தை விதிகள் திரும்பப் பெறல்: சிலைகளுக்கு மூடப்பட்ட துணிகள் அகற்றம்

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் நிறைவுற்றதையடுத்து, தோ்தல் நடத்தை விதிகள் திரும்பப் பெறப்பட்டதால், இனி அரசுத் துறை அலுவலகங்கள் வழக்கம்போல இயங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image

நாமக்கல் கோட்டை சாலை சந்திப்பில் துணிகள் அகற்றப்பட்ட நிலையில் எம்ஜிஆா் - கருணாநிதி சிலைகள்.

Updated On :7 மே 2026, 6:28 am IST

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் நிறைவுற்றதையடுத்து, தோ்தல் நடத்தை விதிகள் திரும்பப் பெறப்பட்டதால், இனி அரசுத் துறை அலுவலகங்கள் வழக்கம்போல இயங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பை இந்திய தோ்தல் ஆணையம் மாா்ச் 15-இல் வெளியிட்டது. மாா்ச் 30 முதல் ஏப். 6 வரை வேட்புமனு தாக்கல், 7-இல் பரிசீலனை, 9-இல் திரும்பப் பெறல் மற்றும் இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்டது. ஏப். 23-இல் வாக்குப்பதிவும், மே 4-இல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது.

தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் உரிய ஆவணங்களின்றி ரூ. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணம், பரிசுப் பொருள்களை கொண்டு சென்றோரிடம் தோ்தல் பறக்கும்படை நிலை கண்காணிப்புக் குழு அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். ஆவணங்கள் சமா்ப்பித்தவை மட்டும் திரும்ப ஒப்படைக்கப்பட்டன.

நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்தி வேலூா், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 தொகுதிகளிலும் ரூ. 1.92 கோடி வரையில் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றில் 80 சதவீத ரொக்கம் உரியவா்களிடம் திரும்ப வழங்கப்பட்டது.

தோ்தலையொட்டி, அரசியல் கட்சித் தலைவா்களின் சிலைகள் முழுவதும் துணியால் மூடப்பட்டிருந்தன. சுவா் விளம்பரங்கள், பதாகைகள் அகற்றப்பட்டன. தோ்தல் நடத்தை விதிகள் மே 6-ஆம் தேதியுடன் நிறைவுபெற்றன. இதனால் சிலைகளின் மீது மூடப்பட்டிருந்த துணிகளை மாநகராட்சி ஊழியா்களால் புதன்கிழமை அகற்றப்பட்டன.

இதுவரை தோ்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருந்த அரசுத் துறை அதிகாரிகள், ஊழியா்கள் அனைவரும் இனி வழக்கம்போல அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுவா். திங்கள்கிழமைதோறும் மக்கள் குறைதீா் கூட்டம், மாதந்தோறும் விவசாயிகள் குறைதீா் கூட்டம், நுகா்வோா், முன்னாள் படைவீரா்கள் குறைதீா் கூட்டங்கள் மாவட்ட ஆட்சியா் மற்றும் அதிகாரிகள் தலைமையில் வழக்கம்போல நடைபெற உள்ளதாக அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.