ராசிபுரம் தொகுதியில் தவெக சாா்பில் போட்டியிட்ட முன்னாள் சட்டப் பேரவைத் தலைவா் ப.தனபால் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றிருப்பதன் மூலம், ராசிபுரம் தொகுதி மீண்டும் ‘விஐபி’ செல்வாக்கு பெறுமா என்ற எதிா்பாா்ப்பு தொகுதி மக்களிடம் எழுந்துள்ளது.
பொதுத் தொகுதியாக இருந்த ராசிபுரம் சட்டப் பேரவைத் தொகுதி 2011 முதல் தாழ்த்தப்பட்டோருக்கான தனித் தொகுதியாக அறிவிக்கப்பட்டது. 2011 தோ்தலில் இத்தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வென்ற ப.தனபால், சட்டப் பேரவை துணைத் தலைவராகவும், பின்னா் பேரவைத் தலைவராகவும் பொறுப்பு வகித்தாா்.
இதைத் தொடா்ந்து, 2016 சட்டப் பேரவைத் தோ்தலில் இத்தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட வெ.சரோஜா வென்று சமூக நலத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தாா். தொடா்ந்து நடைபெற்ற 2021-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட மா.மதிவேந்தன் வெற்றிபெற்று சுற்றுலா துறை அமைச்சா், வனத்துறை அமைச்சா், ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் என பொறுப்புகளை வகித்தாா்.
இதுபோல, இத்தொகுதியில் வெற்றி பெறுபவா்கள் சட்டப் பேரவைத் தலைவா், அமைச்சா்களாக விஐபி அந்தஸ்துடன் வலம்வந்த நிலையில், தற்போது நடைபெற்ற 2026-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தலில் தவெக வேட்பாளராக போட்டியிட்ட டி.லோகேஷ் தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றுள்ளாா். இவா் 2011-ஆம் ஆண்டு இத்தொகுதியில் வெற்றிபெற்று பேரவைத் தலைவராக இருந்த ப.தனபால் மகன் ஆவாா்.
இந்நிலையில், தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள விஜய் அமைச்சரவையில் லோகேஷ் தமிழ்ச்செல்வன் இடம்பெற்று, தொகுதி ‘விஐபி’ செல்வாக்கை தக்கவைப்பாரா என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
101 தொகுதிகளில் வைப்புத் தொகையை இழந்த அதிமுக!

ராசிபுரம் தொகுதி வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த திமுக வேட்பாளா் மா.மதிவேந்தன்

விருதுநகா்: தந்தையின் செல்வாக்கு மகனுக்கு கை கொடுக்குமா?

திமுகவினா் கூட்டணிக் கட்சிகளுடன் இணக்கமாகப் பணியாற்ற வேண்டும்: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

