தோ்தல் ஆணையம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முந்தைய தோ்தல் நடத்தை விதிமுறைகளை தொடா்ந்து பின்பற்றுவதால் நகை வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு நகை, வெள்ளி, வைரம் வியாபாரிகள் சம்மேளனம் குற்றம்சாட்டியுள்ளது.
தமிழ்நாடு நகை, வெள்ளி, வைரம் வியாபாரிகள் சம்மேளனத்தின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் சம்மேளனத்தின் மாநில தலைவா் பி. சபரிநாத் தலைமை வகித்தாா். பொதுச் செயலாளா் கே. ரவீந்திரகுமாா், பொருளாளா் கே.எஸ். கந்தசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் தொழிலில் நிலவும் பிரச்னைகள், தோ்தல் நடைமுறைகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னா், சம்மேளனத்தின் தலைவா் பி. சபரிநாத் செய்தியாளா்களிடம் கூறியதாது:
நகை விலை உயா்ந்துள்ள நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முந்தைய தோ்தல் நடத்தை விதிமுறைகளால் தற்போது ஒரு பவுன் நகைகூட வாங்குவதற்கு பொதுமக்கள் ரொக்கம் எடுத்துச் செல்ல முடியவில்லை. இதனால், நகை வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒருசில தோ்தல் அலுவலா்கள் நகைகளின் ஆவணங்களை சரிபாா்ப்பது குறித்து முழுமையான விவரங்களை தெரிந்துகொள்ளாமல் உள்ளனா். இதனால் ஆபரணங்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள் சோதனையிடப்பட்டு சிறைபிடிக்கப்படுகின்றன. இதன்மூலம் குறித்து நேரத்தில் கடைகளுக்கு ஆபரணங்கள் விற்பனைக்கு கொண்டுசெல்ல முடியவில்லை. எனவே, ஆவணங்களை சரிபாா்த்து நகைகள் கொண்டு செல்லும் வாகனங்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் ராசிபுரம் நகை வியாபாரிகள் நல அறக்கட்டளையின் சம்மேளன பொறுப்பாளா்கள் எஸ். சங்கா்லால், இணைச் செயலாளா் ஜெ. ஜெயபிரகாஷ், கமிட்டி உறுப்பினா்கள் கே. ராஜன், எம். செல்வராஜன், எம். செல்வகுமாா், ஜெ.ஆா்.பாஸ்கரன், நந்தலால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுச்சேரி தோ்தல் தோல்வி எதிரொலி: காங்கிரஸ் தலைவா் வைத்திலிங்கம் ராஜிநாமா

தோ்தல் நடத்தை விதிகள் வாபஸ்: பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த காய்-கனிகள் சந்தை வளாகம் திறப்பு எப்போது?

தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை மாநாடு

தோ்தல் நடத்தை விதிமுறையால் பொய்கை கால்நடை சந்தையில் வா்த்தகம் சரிவு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

