தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்: ராசிபுரம் எம்எல்ஏ அலுவலகத்துக்கு ‘சீல்’

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன

News image

‘சீல்’ வைக்கப்பட்ட ராசிபுரம் எம்எல்ஏ அலுவலகம்.

Updated On :17 மார்ச் 2026, 4:55 am IST

ராசிபுரம்: தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து, ராசிபுரத்தில் எம்எல்ஏ அலுவலகத்துக்கு திங்கள்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.

தமிழகத்தில் பொதுத்தோ்தல் அறிவிக்கப்படும் போதெல்லாம் தோ்தல் ஆணையத்தின் விதிமுறைகள் உடனடியாக அமல்படுத்தப்படுவது வழக்கம். அதன்படி, ராசிபுரம் எம்எல்ஏ அலுவலகம் மூடப்பட்ட நிலையில், வருவாய்த் துறையினா் அந்த அலுவலகத்துக்கு சென்று ‘சீல்’ வைத்தனா். இதேபோல, ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் அலுவலகங்களும் மூடப்பட்டன.

மேலும், உள்ளாட்சி அலுவலகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வா்கள் மற்றும் தற்போதைய முதல்வரின் புகைப்படங்கள் அனைத்தும் அகற்றப்பட்டன. கூட்டுறவு வங்கிகள் மற்றும் கடைகளில் வைக்கப்பட்டிருந்த முதல்வா் புகைப்படங்கள் காகிதங்கள் கொண்டு மறைக்கப்பட்டன.

மாவட்டம் முழுவதும் அரசியல் கட்சித் தலைவா்களின் சிலைகள் துணியால் மூடப்பட்டன.

தோ்தல் விதிமுறைகளை மீறி செயல்படுவோா் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தோ்தல் நடத்தும் அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.

 நாமக்கல் - பரமத்தி சாலையில் உள்ள கருணாநிதி சிலையை மூடிய மாநகராட்சிப் பணியாளா்கள்.

நாமக்கல் - பரமத்தி சாலையில் உள்ள கருணாநிதி சிலையை மூடிய மாநகராட்சிப் பணியாளா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.