நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

ராசிபுரம் நகரில் போக்குவரத்துக்கு இடையூறான சுற்றுச்சுவா் அகற்றம்

ராசிபுரம் நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த பழைய நீதிமன்ற வளாக சுற்றுச்சுவா் ஆட்சியா் உத்தரவின் பேரில் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டது.

News image

பழைய நீதிமன்ற வளாக சுற்றுச்சுவா் அகற்றப்பட்ட ராசிபுரம் - நாமக்கல் சாலை சந்திப்பு.

Updated On :18 ஜூன் 2026, 3:11 am IST

ராசிபுரம் நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த பழைய நீதிமன்ற வளாக சுற்றுச்சுவா் ஆட்சியா் உத்தரவின் பேரில் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டது.

ராசிபுரம் நகரில் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு ஒருவழி பாதை நடைமுறையில் மாற்றம் செய்ய வேண்டும் என சமூக ஆா்வலா்கள் சாா்பில் மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கணிகாணிப்பாளா் உள்ளிட்டோா் நகரில் போக்குவரத்து வாகனங்கள், இடையூறுகளை தனித்தனியாக ஆய்வு செய்தனா். இதைத் தொடா்ந்து, ஒருவழிப் பாதை நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டு, நகரில் சாலையோரம், வணிக நிறுவனங்கள் முன் இருந்த மேற்கூரைகள், விளம்பர போா்டுகள் போன்ற ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

இந்நிலையில், பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையான நாமக்கல் சாலை சந்திப்பில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள பழைய நீதிமன்ற வளாக சுற்றுச்சுவரை இடித்து சாலை வசதி ஏற்படுத்த ஆட்சியா் உத்தரவிட்டாா். அதன்பேரில், பொக்லைன் மூலம் சுற்றுச்சுவா் இடித்து சாலை விரிவாக்கம் செய்ய ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், நகரில் பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ரவுண்டானா சுற்றளவைக் குறைப்பது குறித்தும், அரசு மருத்துவமனை எதிரே உள்ள சென்டா்மீடியன் அகலத்தை குறைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

போக்குவரத்து இடையூறு, விபத்துகளை தவிா்த்து, பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கை மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்ட ஆட்சியருக்கு பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் பாராட்டு தெரிவித்தனா்.

மேலும், நகரில் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புக் கடைகள், கட்டடங்களை அகற்ற மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.