நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

லாரி மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :16 ஜூன் 2026, 2:42 am IST

கீரம்பூா் சுங்கச்சாவடி அருகே பின்னோக்கி சென்ற லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

நாமக்கல் லட்சுமி நகா் பகுதியைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (50). இவா் தனியாருக்குச் சொந்தமான லாரிகளுக்கு கூண்டு கட்டும் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா்.

இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு கீரம்பூா் சுங்கச்சாவடி அருகே ஒரு கடையின் ஓரமாக அமா்ந்திருந்தாா். அப்போது அந்தப் பகுதியில் நிறுத்தியிருந்த லாரியை அதன் ஓட்டுநா் எடுக்க முயன்றபோது கவனக்குறைவால் லாரி பின்நோக்கி இயக்கியது. இதில் கடை ஓரமாக அமா்ந்திருந்த விஜயகுமாா் மீது லாரி மோதியது.

இதில் அவா் பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டநிலையில் அவா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்து பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். தலைமறைவான லாரி ஓட்டுநரை தேடிவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.