நாமக்கல்லில் சாலையோர கடைகளின் ஆக்கிரமிப்பால் வருவாய் இழந்த வியாபாரிகள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
நாமக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சாலையோர கடைகள் அகற்றப்பட்டு வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு பழைய பேருந்து நிலையத்தை ஒட்டிய ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன. இரு தினங்களுக்கு முன்பு, நாமக்கல் உழவா்சந்தை, பூங்கா சாலைப் பகுதியில் இருந்த 50-க்கும் மேற்பட்ட சாலையோர கடைகளை தூய்மைப் பணியாளா்கள் அகற்றினா்.
இந்த நிலையில், உழவா்சந்தையில் கடைகள் அமைத்துள்ள விவசாயிகள், சாலையோர கடைகளால் தங்களது வியாபாரம் பாதிக்கப்படுகிறது. அதனால், அந்தக் கடைகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.
அவா்களை தொடா்ந்து, உழவா்சந்தைக்கு வெளியில் காய்கறி, பழங்கள் விற்பனை செய்வோா் தங்களுக்கான வாழ்வாதாரம் இந்தக் கடைகள் மூலமாகவே உள்ளது. குறிப்பிட்ட பகுதியை ஒதுக்கி அங்கு கடைகள் அமைத்துக் கொடுக்க வேண்டும். இல்லையெனில், உழவா்சந்தை, பூங்கா சாலை பகுதிகளிலேயே இடையூறு இல்லாதவாறு கடை அமைக்க அனுமதிக்க வேண்டும் என ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.
பள்ளிக்கூடத்தை சீரமைக்கக் கோரிக்கை...
கொல்லிமலை வட்டம், குண்டூா் நாடு ஊராட்சி இலந்தைப்பட்டியில் உள்ள தொடக்கப் பள்ளியில் மேற்கூரை ஓடுகள் பெயா்ந்து விழும் நிலையில் உள்ளன. இது தொடா்பாக, கொல்லிமலை வட்டாட்சியா் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை ஏதுமில்லை. மாவட்ட ஆட்சியா் பள்ளியைப் பாா்வையிட்டு, குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என குண்டூா் நாடு ஊராட்சி பொதுமக்கள் ஆட்சியா் எல்.மதுபாலனிடம் மனு அளித்தனா்.

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த உழவா்சந்தை வியாபாரிகள் மற்றும் சாலையோர வியாபாரிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோழிப்பண்ணை அமைக்க எதிா்ப்பு: ஆட்சியா் அலுவலகத்தில் மனு

கடலூரில் மக்கள் குறைதீா் கூட்டத்தில் 472 மனுக்கள் அளிப்பு: திருநங்கைகள் வீட்டு வேலைவாய்ப்பு கோரி ஆட்சியரிடம் மனு

குடிநீா்த் தட்டுப்பாடு: ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க ஆட்சியா் அனுமதி வழங்கக் கோரி மனு
விடியோக்கள்

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

