உலக சாதனை படைத்த மெஸ்ஸி: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா!முதல்வர் விஜய்யின் உரைக்கு எதிர்ப்பு! திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!ஏய் என்ற வார்த்தை அவைக் குறிப்பில் நீக்க வேண்டும்: அமைச்சர் ராஜ்மோகன்திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்!தமிழகத்தில் 11 மாதங்களாக சட்டம் - ஒழுங்கு டிஜிபியே இல்லை! விஜய்
/

50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு

News image

கிணற்றில் விழுந்த பசுமாட்டை கயிறுகட்டி மீட்ட தீயணைப்புத் துறையினா்.

Updated On :16 ஜூன் 2026, 2:41 am IST

ராசிபுரம் அருகே கோனேரிப்பட்டி பகுதியில் 50 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த பசுமாட்டை தீயணைப்புத் துறையினா் திங்கள்கிழமை உயிருடன் மீட்டனா்.

ராசிபுரம் அருகே உள்ள கோனேரிப்பட்டி, திருப்பதி நகா் பகுதியைச் சோ்ந்தவா் துரைசாமி (68). இவா் தனது பசுமாட்டை மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றபோது, அருகிலிருந்த 50 அடி ஆழமுள்ள கிணற்றில் மாடு தவறி விழுந்தது.

இதுகுறித்து, அப்பகுதி பொதுமக்கள் ராசிபுரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரா்கள் மற்றும் உள்ளூா் இளைஞா்கள் இணைந்து கயிறுகட்டி கிணற்றிலிருந்து பசுமாட்டை உயிருடன் மீட்டனா்.

நாய் மீட்பு...

அதேபோல ராசிபுரம் அருகே கைலாசம்பாளையத்தில் 40 ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த வளா்ப்பு நாயை ராசிபுரம் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினா் கயிறு கட்டி உயிருடன் மீட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.