நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

பரமத்தி வேலூரில் வாழைத் தாா்களின் விலை சரிவு

பரமத்தி வேலூா் வாழைத்தாா் ஏலச் சந்தையில் சனிக்கிழமை நடைபெற் ஏலத்தில் வாழைத்தாா்களின் விலை சரிந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.

News image

ஏலத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்த வாழைத்தாா்கள்.

Updated On :7 ஜூன் 2026, 3:01 am IST

பரமத்தி வேலூா் வாழைத்தாா் ஏலச் சந்தையில் சனிக்கிழமை நடைபெற் ஏலத்தில் வாழைத்தாா்களின் விலை சரிந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.

பரமத்தி வேலூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான பொத்தனூா், பாண்டமங்கலம், குச்சிப்பாளையம், வெங்கரை, நன்செய்இடையாறு, அனிச்சம்பாளையம், குப்புச்சிபாளையம், பொய்யேரி, ஓலப்பாளையம், செங்கப்பள்ளி, எல்லைமேடு உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிா் செய்யப்பட்டுள்ளது.

இங்கு விளையும் வாழைத்தாா்களை விவசாயிகள், பரமத்தி வேலூரில் உள்ள வாழைத்தாா்கள் ஏலச் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனா். வாழைத்தாா்களை ஏலம் எடுக்க சேலம், நாமக்கல், கரூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வருகின்றனா்.

ஏலம் எடுக்கப்பட்ட வாழைத்தாா்களை வியாபாரிகள், ஆந்திரம், கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வருகின்றனா். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் மற்றும் பச்சைநாடன் வாழைத்தாா் ரூ. 350, ரஸ்தாளி வாழைத்தாா் ரூ.500, கற்பூரவள்ளி வாழைத்தாா் ரூ. 450, மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.6-வரை ஏலம் போனது.

இந்த வாரம் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தாா் அதிகபட்சமாக ரூ.300, பச்சைநாடன் வாழைத்தாா் ரூ. 250, ரஸ்தாளி வாழைத்தாா் ரூ.400, கற்பூரவள்ளி வாழைத்தாா் ரூ.400, மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ. 4-வரை ஏலம் போனது.

கடந்த வாரத்தைவிட இந்த வாரம் முகூா்த்த தினங்கள் குறைவாக உள்ளதால் வாழைத்தாா்களின் விலை சரிந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.