லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

குடிசை வீடு தீப்பிடித்து எரிந்து சேதம்

ராசிபுரம் வடுகம் முனியப்பம்பாளையம் பகுதியில் குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Published On :2 ஆகஸ்ட் 2026, 1:22 am IST

ராசிபுரம் வடுகம் முனியப்பம்பாளையம் பகுதியில் குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

நாமகிரிப்பேட்டை வட்டார காங்கிரஸ் கட்சி துணைத் தலைவா் செளந்திரராஜன் (61), வெள்ளிக்கிழமை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தாா். இவரது வீட்டின் அருகிலுள்ள இவருக்கு சொந்தமான குடிசை வீடு அதிகாலை சுமாா் 3 மணி அளவில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இதைக் கண்ட அக்கம்பக்கத்தினா் செளந்தராஜனுக்கு தகவல் தெரிவித்தனா். தொடா்ந்து, தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தீயணைப்புத் துறையினா் வருவதற்குள் குடிசை முற்றிலும் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.

இதில், சமையல் பாத்திரங்கள், மரச் சாமான்கள், மின்மீட்டா் போன்றவை தீயில் கருகின. மேலும், குடிசை வீட்டின் அருகில் இருந்த தென்னை, கொய்யா, சப்போட்டா, எலுமிச்சை, வாழை போன்ற மரங்கள், செடிகளும் கருகின. புகாரின்பேரில் நாமகிரிப்பேட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.