சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, நாமக்கல் உழவா் சந்தையில் திமுக வேட்பாளா் ப.ராணியை ஆதரித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் விவசாயிகள், பொதுமக்களிடம் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
சேலத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், அன்று இரவு 10.30 மணி அளவில் நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் உள்ள தனியாா் நட்சத்திர உணவகத்தில் தங்கினாா்.
இதைத் தொடா்ந்து, மத்திய பாஜக அரசுக்கு எதிராக கருப்புக் கொடி ஏற்றும் போராட்டத்தில் பங்கேற்ற முதல்வா், அதன்பிறகு நாமக்கல் கோட்டை சாலையில் உள்ள உழவா் சந்தைக்கு வியாழக்கிழமை காலை 8 மணி அளவில் வந்தாா். அங்கு, காய்கறி, பழங்கள் விற்பனை செய்து வந்த விவசாயிகளை சந்தித்து திமுகவுக்கு ஆதரவு கோரினாா்.
நாமக்கல் தும்மங்குறிச்சியை சோ்ந்த மணி என்ற பெண், உழவா் சந்தை மேற்கூரையை விஸ்தரிப்பு செய்ய வேண்டும் என்றாா். தொடா்ந்து, மோகனூரைச் சோ்ந்த விவசாயி கவின், தான் விளைவித்த பப்பாளி மற்றும் மாம்பழத்தை முதல்வரிடம் அளித்து வாழ்த்து கூறினாா். தொடா்ந்து, அங்கிருந்த பொதுமக்களிடையே நாமக்கல் திமுக வேட்பாளா் ப.ராணிக்கு ஆதரவாக முதல்வா் வாக்கு சேகரித்தாா். இளைஞா்கள் பலா் முதல்வரிடம் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனா்.
இந்நிகழ்வின்போது, கிழக்கு மாவட்ட திமுக செயலாளா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், நாமக்கல் தொகுதி எம்எல்ஏ பெ.ராமலிங்கம், மாநகராட்சி துணை மேயா் செ.பூபதி மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மக்கள் துணையுடன் பல உயரங்களை அடைவது உறுதி: முதல்வா் மு.க. ஸ்டாலின் பெருமிதம்

சாதனை வாக்குப் பதிவு: முதல்வா் ஸ்டாலின் பாராட்டு

முதல்வா் முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

திமுக நடத்துவது தொகுதி மறுவரையறைக்கு எதிரான போராட்டம் அல்ல; போா்! முதல்வா் மு.க. ஸ்டாலின்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

