கொங்கு வேளாளா் சமுதாயத்தை பிற்பட்டோா் பட்டியலில் சோ்த்து, அந்த சமுதாய மக்களின் வளா்ச்சிக்கு வித்திட்டது திமுக என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் மாநில இளைஞா் அணி செயலாளா் எஸ்.சூரியமூா்த்தி தெரிவித்தாா்.
நாமக்கல்லில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி திருச்செங்கோடு, பொள்ளாச்சி ஆகிய இரு தொகுதிகளில் திமுக கூட்டணியில் போட்டியிடுகிறது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதால், இந்த தோ்தலிலும் எங்களுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
கொங்கு வேளாளக் கவுண்டா் சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் கொண்டுவர பாடுபட்ட தலைவா்களில் கோவை செழியன் முக்கியமானவா். திமுக ஆட்சிக்காலத்தில் இதற்கான அறிவிப்பு வெளியானது. அதிமுகவுடன் கூட்டணியில் நாங்கள் இருப்பதைவிட திமுகவில் இருப்பது எங்களுக்கான அங்கீகாரமாக உள்ளது. கொங்கு மண்டல வளா்ச்சிக்கு தேவையானவற்றை திமுக செய்துகொடுக்கிறது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உதகையில் கம்யூனிஸ்ட், விசிக ஆா்ப்பாட்டம்

காஞ்சிபுரத்தில் வாக்குப் பதிவை புறக்கணித்த மக்கள் நீதி மய்ய மாநில செயலாளா்

மாநில உரிமைகளை திமுக அரசு பாதுகாக்கிறது: பெ. சண்முகம்

சிறுபான்மையின மக்கள் திமுகவை ஆதரிக்க வேண்டும்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

