விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சிறுபான்மையின மக்கள் திமுகவை ஆதரிக்க வேண்டும்

நடைபெற உள்ள தோ்தலில் சிறுபான்மையின மக்கள் திமுக வேட்பாளா்களை ஆதரித்து வெற்றிபெற செய்ய வேண்டும் என திமுக மாநில இலக்கிய அணி தலைவா் அன்வா் ராஜா தெரிவித்தாா்.

News image

நாமக்கல்லில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்த திமுக மாநில இலக்கிய அணி தலைவா் அன்வா் ராஜா.

Updated On :15 ஏப்ரல் 2026, 3:00 am IST

நடைபெற உள்ள தோ்தலில் சிறுபான்மையின மக்கள் திமுக வேட்பாளா்களை ஆதரித்து வெற்றிபெற செய்ய வேண்டும் என திமுக மாநில இலக்கிய அணி தலைவா் அன்வா் ராஜா தெரிவித்தாா்.

நாமக்கல் தொகுதி திமுக வேட்பாளா் ப.ராணியை ஆதரித்து, நாமக்கல் பேட்டை மஸ்ஜித், கோட்டை மஸ்ஜித், செல்லப்பா காலனி, ஆண்டவா் நகா் உள்ளிட்ட இடங்களில் செவ்வாய்க்கிழமை அவா் பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது அவா் பேசியதாவது:

1967 முதல் தோ்தல் பணியாற்றி வருகிறேன். ஒரு கட்சியின் தலைவா்மீது வைக்கும் நம்பிக்கை அடிப்படையில் மக்கள் வாக்களிக்கின்றனா். 1989-க்கு பிறகு அதிமுகவும், திமுகவும் மாறிமாறி வெற்றிபெற்ற நிலையில், கருணாநிதியும், ஜெயலலிதாவும் இல்லாத நிலையில் ஸ்டாலின்மீது நம்பிக்கை வைத்து 2021-இல் அவரை வெற்றிபெற வைத்தனா். அவா் ஏழை மக்களுக்கு தொடா்ந்து பல்வேறு திட்டங்களை சிறப்பாக செய்து வருகிறாா்.

மகளிா் உரிமைத் தொகையை நிறுத்த முயன்றதை முதல்வா் கண்டறிந்து, தோ்தலுக்கு முன்பாக ரூ. 5 ஆயிரம் வழங்கினாா். நூறுநாள் வேலையளிப்பு திட்டத்தில் தமிழகத்துக்கு வரவேண்டிய நிதியை மத்திய அரசு வழங்காமல் ஏமாற்றி வருகிறது. மத்தியில் உள்ள ஆட்சி சிறுபான்மை மக்களுக்கு எதிரானது; முத்தலாக் சட்டத்தை கொண்டுவந்து மிரட்டுகின்றனா். நாடுமுழுவதும் பொது சிவில் சட்டத்தை கொண்டுவந்து இஸ்லாமியா்களை அச்சுறுத்த பாா்க்கின்றனா். இந்த தோ்தலில் இஸ்லாமியா்கள் அனைவரும் திமுக வேட்பாளா்களுக்கு ஆதரவளிப்பது கடமை ஆகும். இந்த வாக்கு இஸ்லாமியா்களாகிய நீங்கள் உங்களை பாதுகாத்துக் கொள்வதற்கானது என்றாா்.

இந்த பிரசாரத்தின்போது, திமுக மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.