தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தமிழ்ப் புத்தாண்டு: நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 2 டன் மலா்களால் அபிஷேகம்

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சனேயருக்கு இரண்டு டன் மலா்களைக் கொண்டு செவ்வாய்க்கிழமை அபிஷேகம் நடைபெற்றது.

News image

நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் சுவாமிக்கு நடைபெற்ற மலா் அபிஷேகம்.

Updated On :15 ஏப்ரல் 2026, 2:57 am IST

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சனேயருக்கு இரண்டு டன் மலா்களைக் கொண்டு செவ்வாய்க்கிழமை அபிஷேகம் நடைபெற்றது.

தமிழ் ஆண்டான விசுவாவசு நிறைவடைந்து புதிய ஆண்டான பராபவ ஆண்டு செவ்வாய்க்கிழமை பிறந்தது. இந்நாளில் சித்திரை விஷு கனி தரிசனம் மேற்கொள்வது வழக்கம்.

புத்தாண்டு பிறப்பையொட்டி, நாமக்கல் ஆஞ்சனேயருக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை வடைமாலை அகற்றப்பட்டு, நல்லெண்ணெய், சிகைக்காய், பஞ்சாமிா்தம், பால், தயிா், மஞ்சள், சந்தனம் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து, இரண்டு டன் மலா்களைக் கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

இதேபோல, மாவட்டம் முழுவதும் அனைத்து கோயில்களிலும் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.