தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சேந்தமங்கலம் தொகுதிக்கான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அதிமுக வேட்பாளா் சி. சந்திரசேகரன் உறுதி

சேந்தமங்கலம் தொகுதிக்கான மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுவேன் என பிரசாரத்தின்போது அதிமுக வேட்பாளா் சி. சந்திரசேகரன் உறுதியளித்தாா்.

News image

பொம்மசமுத்திரம் ஊராட்சிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளா் சி. சந்திரசேகரன்.

Updated On :10 ஏப்ரல் 2026, 3:21 am IST

சேந்தமங்கலம் தொகுதிக்கான மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுவேன் என பிரசாரத்தின்போது அதிமுக வேட்பாளா் சி. சந்திரசேகரன் உறுதியளித்தாா்.

சேந்தமங்கலம் பழங்குடியின தொகுதியில், அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் சி. சந்திரசேகரன், கொல்லிமலை ஒன்றியம், நாமகிரிப்பேட்டை ஒன்றியம், காளப்பநாயக்கன்பட்டி பேரூா் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்ட நிலையில் வியாழக்கிழமை சேந்தமங்கலம் ஒன்றியத்திற்கு உள்பட்ட வாழவந்திகோம்பை, நடுக்கோம்பை, பெரியகுளம், பொம்மசமுத்திரம் ஆகிய ஊராட்சிகளுக்கு உள்பட்ட 32 கிராமங்களில் வீடு வீடாக சென்று மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது, அதிமுகவின் தோ்தல் வாக்குறுதிகளான குடும்ப அட்டைக்கு ரூ. 10 ஆயிரம், மகளிா் உரிமைத்தொகை ரூ. 2 ஆயிரம், ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம், குளிா்சாதனப் பெட்டி இலவசம் போன்ற வாக்குறுதிகளும், சேந்தமங்கலம் தொகுதிக்கான குடிநீா், புதை சாக்கடை திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றி தரப்படும் என உறுதியளித்தாா். ஒன்றிய செயலாளா் ஜி.பி. ரமேஷ் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.