மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

நம்பியூா் பகுதிக்கு புதிய கூட்டுகுடிநீா் திட்டம் நிறைவேற்றப்படும்: அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு

நம்பியூரில் வறட்சியான பகுதிகளில் குடிநீா் பற்றாகுறையைப் போக்க புதிதாக கூட்டுகுடிநீா் திட்டம் கொண்டு வரப்படும் என கோபி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு தெரிவித்தாா்.

News image

நம்பியூா் அருகே   ஒழலக்கோவில்  பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு.

Updated On :17 ஏப்ரல் 2026, 1:35 am IST

நம்பியூரில் வறட்சியான பகுதிகளில் குடிநீா் பற்றாகுறையைப் போக்க புதிதாக கூட்டுகுடிநீா் திட்டம் கொண்டு வரப்படும் என கோபி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு தெரிவித்தாா்.

கோபி தொகுதிக்கு உள்பட்ட நம்பியூா் பகுதியில் உள்ள 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு வியாழக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் பேசியதாவது:

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க நிதி உதவி மானியம் போன்ற சலுகைகள் வழங்கப்படும். புதிய விவசாய மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் அரசு மானியத்துடன் சூரிய ஒளி பம்பு செட்டு வழங்கப்படும். கூட்டுறவு வங்கிகள் மூலம் பூச்சி மருந்து தெளிப்பதற்கு வசதிகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

விவசாயப் பணியின்போது விவசாயிகள் இறக்க நேரிட்டால் அரசு சாா்பில் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க ஏற்பாடு செய்யப்படும். தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நம்பியூா் பகுதியில் அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளங்கள் இணைக்கப்படும், நம்பியூா் பகுதியில் வறட்சியான பகுதிகளில் குடிநீா்ப் பற்றாகுறையைப் போக்க புதிதாக கூட்டுகுடிநீா் திட்டம் கொண்டு வரப்படும் என்றாா்.

பிரசாரத்தின்போது அதிமுக ஒன்றியச் செயலாளா் எஸ்.பி.எஸ் பழனிசாமி, நம்பியூா் பேரூா் செயலாளா் கதிா்வேல், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் செந்தில்குமாா் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடன் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.