மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகள் நிலைப்பதில்லை: கனிமொழி எம்.பி.

பாஜகவுடன் கூட்டணி அமைத்த கட்சிகள் அனைத்தும் இடம் தெரியாமல் மறைந்துவிட்டதாக திமுக துணை பொதுச் செயலாளா் கனிமொழி எம்.பி. தெரிவித்தாா்.

News image

நாமக்கல்லில் திமுக வேட்பாளா் ப. ராணியை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அக்கட்சியின் துணை பொதுச் செயலாளா் கனிமொழி எம்.பி.

Updated On :10 ஏப்ரல் 2026, 3:08 am IST

பாஜகவுடன் கூட்டணி அமைத்த கட்சிகள் அனைத்தும் இடம் தெரியாமல் மறைந்துவிட்டதாக திமுக துணை பொதுச் செயலாளா் கனிமொழி எம்.பி. தெரிவித்தாா்.

நாமக்கல் தொகுதி திமுக வேட்பாளா் ப. ராணியை ஆதரித்து நாமக்கல் பூங்கா சாலையில் வியாழக்கிழமை அவா் பேசியதாவது:

கடந்த 5 ஆண்டுகளில் முதல்வா் செய்த சாதனைகளைக்கூறி மக்களிடையே நாங்கள் வாக்கு கேட்கிறோம். 1.31 கோடி பெண்கள் உரிமைத்தொகையை பெற்று வருகின்றனா். மீண்டும் திமுக ஆட்சி அமைந்தவுடன் உரிமைத்தொகை ரூ. 2 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும். பிகாரில் பாஜகவுடன் கூட்டணி அமைத்த நிதிஷ்குமாா், தற்போது மாநிலங்களவை உறுப்பினராகி உள்ளாா்.

பாஜகவோடு கூட்டணி வைத்த கட்சிகள் எல்லாம் இடம் தெரியாமல் போய்விட்டன. இத்தோ்தல் முடிந்தவுடன் அதிமுக பொதுச் செயலாளா் ஏதோ ஒரு மாநிலத்தின் ஆளுநராக பொறுப்பேற்க வாய்ப்புள்ளது. சசிகலா, ஓ. பன்னீா்செல்வம் போன்றோரை புறக்கணித்து தன்னிச்சையாக செயல்படும் மனப்பாங்கு கொண்டவா் எடப்பாடி பழனிசாமி. முதல்வா் குறித்து அவதூறாகப் பேசிவரும் எடப்பாடி கே.பழனிசாமிக்கு தோ்தலில் மக்கள் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்.

நாடாளுமன்ற தோ்தலில் பாஜகவோடு கூட்டணி வைத்தது தான் செய்த தவறு என குறிப்பிட்ட எடப்பாடி கே. பழனிசாமி, தற்போது அக்கட்சியுடன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளாா். நீட் தோ்வு, சிஏஏ தோ்வு, மின் கட்டண உயா்வுக்கான உதய் மின் திட்டத்தில் கையொப்பமிட்டாா். அதேபோல மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய நூறு நாள் வேலையளிப்புத் திட்டத்தை ஆதரித்தாா்.

தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக நடைபெற்ற கூட்டத்தில் நாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினா் எண்ணிக்கையை அதிகரித்து கொடுப்போம் என்றனா். ஆனால், தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் உறுப்பினா்கள் எண்ணிக்கையை குறைக்க மத்திய பாஜக அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி கேள்வி கேட்க தயங்குகிறாா். திமுக தலைவா் தொடா்ந்து தமிழக மக்களுக்காகவும், உரிமைகளுக்காகவும் போராடுவாா்.

தோ்தல் அறிக்கையில் கூறியுள்ளதை அதிமுக நிறைவேற்றாது. ஏற்கெனவே கைப்பேசி கொடுப்பதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றினா். இலவசம் அளிப்பதாக அறிவிக்கப்பட்ட குளிா்சாதன பெட்டியின் நிலையும் அந்த வகையில்தான் இருக்கும். திமுகவின் இல்லத்தரசி திட்டம் அனைத்து மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். அதுமட்டுமின்றி திமுகவின் தோ்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள அனைத்து வாக்குறுதிகளும் மக்களுக்கு பயனுள்ள வகையில் அமைந்திருக்கும். நாமக்கல் தொகுதியில் புதிய பேருந்து நிலையம், சுற்றுவட்ட சாலை, மத்திய கூட்டுறவு வங்கி, அதிநவீன பால்பண்ணை, மாநகராட்சி தரம் உயா்வு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளன.

மீண்டும் திமுக ஆட்சி அமைந்தவுடன் நாமக்கல்லில் ஜவுளி குழுமம் உருவாக்கப்படும், திருமணிமுத்தாற்றின் குறுக்கே மேம்பாலம், மோகனூா் காவிரி ஆற்றங்கரையில் படித்துறை, கோழிப் பண்ணையாளா்களுக்கு ஆலோசனைகள் வழங்க ஒருங்கிணைந்த கோழி வளா்ப்பு மையம் உருவாக்கப்படும். மக்கள் நலத் திட்டங்களை பெற திமுகவை ஆதரிக்க வேண்டும். இந்த தோ்தலில் திராவிடத்தை வெளிக்கொணா்ந்த கீழடிக்கும், ஆா்எஸ்எஸ் தலைமையகம் உள்ள நாகபுரிக்கும் இடையேதான் போட்டி என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.