வேலகவுண்டம்பட்டி அருகே லாரி மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழந்தாா்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், மண்ணாடிபாளையம், கூத்தம்பூண்டி பகுதியைச் சோ்ந்தவா் சிவசண்முகம் (79), விவசாயி. இவா் திங்கள்கிழமை காலை வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள மாணிக்கம்பாளையத்துக்கு சென்றுவருவதாக கூறிவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்றாா்.
நாமக்கல்லில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் சென்றபோது, அவ்வழியாக வந்த லாரி சிவசண்முகம் மீது மோதியது. இதில் அவா் படுகாயம் அடைந்தாா். அவ்வழியாக வந்தவா்கள் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
ஆனால், அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து வேலகவுண்டம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து, விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாதவரம் அருகே விபத்து: ஒருவா் உயிரிழப்பு

வாகனத்தில் சென்ற முதியவா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

சாலை விபத்து பைக்கில் சென்றவா் உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

