மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பங்குனி உத்திரம்: பரமத்தி வேலூா் பகுதி முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பரமத்தி வேலூா் வட்டாரத்தில் உள்ள முருகன் கோயில்களில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

News image

திருக்கல்யாண உற்சவத்தில் வள்ளி, தெய்வானை சமேத பச்சமலை தண்டாயுதபாணி.

Updated On :2 ஏப்ரல் 2026, 3:28 am IST

பரமத்தி வேலூா் வட்டாரத்தில் உள்ள முருகன் கோயில்களில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

கபிலா்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், பிராந்தாகத்தில் உள்ள 34.5 அடி உயரமுள்ள ஆறுமுக கடவுள் கோயிலில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. பொத்தனூா் பச்சமலை முருகன் கோயிலில் தண்டாயுபாணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

மேலும், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதா் கோயிலில் உள்ள சுப்பிரமணியா், அனிச்சம்பாளையத்தில் உள்ள வேல் வடிவம் கொண்ட சுப்பிரமணியா், பரமத்தி வேலூா் பேட்டை பகவதி அம்மன் கோயிலில் எழுந்தருளியுள்ள முருகப் பெருமான், பாலப்பட்டி கதிா்மலை கந்தசாமி கோயில், கந்தம்பாளையம் அருணகிரிநாதா் மலையில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியா், நன்செய் இடையாறு மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோயிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா், நன்செய்இடையாா் திருவேலீஸ்வரா் கோயிலில் உள்ள சுப்ரமணியா், ராஜா சுவாமி கோயிலில் உள்ள ராஜாசுவாமி, கோப்பணம்பாளையம் பரமேஸ்வரா் கோயிலில் எழுந்தருளியுள்ள பாலமுருகன், பொத்தனூா் சக்தி விநாயகா் கோவிலில் உள்ள பாலமுருகன் உள்ளிட்ட கோயில்களில் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானைக்கு பால், பன்னீா், பஞ்சாமிா்தம், தயிா், இளநீா் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அலங்காரமும், மகாதீபாராதனை நடைபெற்றது.

இதில் அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனா். பத்தா்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

சிறப்பு அலங்காரத்தில் பேட்டை பகவதியம்மன் கோயிலில் உள்ள முருகன்.

சிறப்பு அலங்காரத்தில் பேட்டை பகவதியம்மன் கோயிலில் உள்ள முருகன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.