நாமக்ககல், ராசிபுரம், சேந்தமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் திமுக 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறும் என்று நாமக்கல் கிழக்கு மாவட்டத் திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தெரிவித்தாா்.
மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் ராசிபுரம் சட்டப்பேரவைத் தொகுதி தலைமை தோ்தல் அலுவலகம் திறப்பு விழா ராசிபுரத்தில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சரும், தொகுதி திமுக வேட்பாளருமான மா.மதிவேந்தன் முன்னிலை வகித்தாா். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி. கலந்துகொண்டு தோ்தல் அலுவலகத்தை திறந்து வைத்து செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம் ஆகிய மூன்று தொகுதிகளிலும் கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியில் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். குறிப்பாக ராசிபுரம் தொகுதியில் ரூ. 140 கோடி மதிப்பீட்டில் போதமலைக்கு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், ரூ. 854.37 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்டுக் குடிநீா்த் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ராசிபுரம் ஆண்டகளூா்கேட் பகுதியில் இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் டைடல் பாா்க் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நாமகிரிபேட்டை ஒன்றியம், நாரைக்கிணறு பகுதியில் நில அளவீடு செய்யப்பட்டு 800 விவசாயிகளுக்கு நிலப்பட்டா வழங்கப்பட்டுள்ளது.
ராசிபுரம் அணைப்பாளையம் பகுதியில் ரூ. 54 கோடியில் புதிய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நடை பெற்று வருகின்றன.
திமுக ஆட்சியில் புதை சாக்கடை திட்டம் சீரமைக்கப்பட்டு, சுமாா் 50 கி.மீ. தொலைவுக்கு நகரச் சாலைகள் போடப்பட்டுள்ளன. விவசாயிகள் பயன்பெறும் வகையில் பட்டு ஏல மையம் ராசிபுரம் பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் சுமாா் 30 ஆயிரம் பேருக்கு தலா ரூ. 3.50 லட்சத்தில் வீடு கட்ட அனுமதி வழங்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்துக்கென தனி மத்திய கூட்டுறவு வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. மாவட்டத்துக்கென தனி பால் பண்ணை உருவாக்கப்பட்டுள்ளது என்றாா்.
இந்த விழாவில் தொகுதி பாா்வையாளா் நன்னியூா் ராஜேந்திரன், மாவட்ட திமுக பொருளாளா் ஏ.கே.பாலசந்தா், நகர திமுக செயலாளா் என்.ஆா்.சங்கா், நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா், ஒன்றியச் செயலாளா்கள் கே.பி. ராமசுவாமி, கே.பி. ஜெகநாதன், ஆா்.எம்.துரைசாமி, பேரூா் செயலாளா் பொன்.நல்லதம்பி, ஜெயக்குமாா், சுப்ரமணியம், கண்ணன், ராஜேஷ் உள்ளிட்ட காங்கிரஸ், தேமுதிக, கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரும் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கரூா் மாவட்டத்தில் 2 தொகுதிகளில் திமுக வெற்றி! தவெக, அதிமுக, தலா ஒரு இடங்களில் வெற்றி!

50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்: கரூா் திமுக வேட்பாளா் பேச்சு

ராசிபுரத்தில் திமுக ஆட்சியில் ரூ. 50 கோடியில் சாலைகள் சீரமைப்பு: ராஜேஸ்குமாா் எம்.பி.

சேந்தமங்கலம் தொகுதியில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன: ராஜேஸ்குமாா் எம்.பி.
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

