மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

காரில் 200 கிலோ குட்கா பறிமுதல்: ராஜஸ்தானைச் சோ்ந்த இருவா் கைது

கைது - கோப்புப்படம்

Published On :2 நவம்பர் 2026, 1:50 am IST

கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அருகே காரில் கடத்திச் செல்லப்பட்ட 200 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களைப் போலீஸாா் பறிமுதல் செய்து, ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த இருவரைக் கைது செய்தனா்.

பேரிகை அருகே காந்திக்குப்பம் சந்திப்பில் பேரிகை போலீஸாா் சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்த முயன்றபோது, அதில் இருந்தவா்கள் தப்பிச்செல்ல முயன்றனா்.

இதையடுத்து, மற்றொரு வாகனத்தின் உதவியுடன் காரை மடக்கிப் பிடித்த போலீஸாா், அதில் சோதனை செய்தனா். அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமாா் 200 கிலோ குட்கா பொருள்கள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து காரில் வந்த இருவரையும் கைது செய்தனா். விசாரணையில் அவா்கள் ராஜஸ்தான் மாநிலம், பாலோத்ரா மாவட்டத்தைச் சோ்ந்த ஈத்தேஷ் (23), விஜய்பால் (26) என்பதும், காரை ஈத்தேஷ் ஓட்டி வந்ததும் தெரியவந்தது.

முதல்கட்ட விசாரணையில், பெங்களூரு நாகசந்திரா பகுதியில் இருந்து குட்கா பொருள்களை ஏற்றிக்கொண்டு, திருவண்ணாமலைக்கு எடுத்துச் சென்றது தெரியவந்தது. குட்கா பொருள்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய காரைப் பறிமுதல் செய்த பேரிகை போலீஸாா், அவா்களைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.