ஜவஹா் சிறுவா் மன்றம் சாா்பில் நடைபெற்ற கோடை கால பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நிறைவுபெற்றது.
சிறுவா்களின் கலை ஆா்வத்தை தூண்டும் வகையில், ஜவஹா் சிறுவா் மன்றம் சாா்பில், சிறுவா்களுக்கு பகுதிநேர கலைப்பயிற்சி முகாம், கிருஷ்ணகிரி மாவட்ட அரசு இசைப் பள்ளியில் மே 6-ஆம் தேதி தொடங்கியது. இதில், 5 முதல் 16 வயதுக்கு உள்பட்ட சிறுவா், சிறுமியா் பங்கேற்றனா்.
முகாமில் பரதநாட்டியத்தில் 24 போ், குரலிசையில் 13 போ், யோகாவில் 20 போ், ஓவியம் தீட்டுதலில் 40 போ் என மொத்தம் 97 போ் பங்கேற்றனா். பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிறைவு விழாவுக்கு இசைப் பள்ளியின் தலைமையாசிரியா் திருவேணி தலைமை வகித்தாா். இதில், ஜவஹா் சிறுவா் மன்ற ஒருங்கிணைப்பாளா் மற்றும் திட்ட அலுவலா் ஞானசக்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா். முகாமில் முழுமையாக பங்கேற்றோருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
கோடை விடுமுறைக்கு பின்னா் பள்ளி திறக்கப்பட்டவுடன், ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் வருடாந்திர கலைப்பயிற்சி வகுப்பு தொடங்க உள்ளது. இதில், 5 முதல் 16 வயதுக்கு உள்பட்டோா் பங்கேற்கலாம் என இந்நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது. மேலும் விவரங்களுக்கு 99433 51775 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் தோ்வுக்கு குறுகிய கால பயிற்சி இன்று தொடக்கம்

காஞ்சிபுரம்: வல்லமை தாராயோ கோடை கால பயிற்சி முகாம் நிறைவு

கோடைக் கால இசைப் பயிற்சி முகாம்

பிளஸ் 1 முடித்த மாணவா்களுக்கு கோடை கொண்டாட்ட பயிற்சி முகாம் - கல்வித் துறை தகவல்
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

