ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

நீட் தோ்வுக்கு குறுகிய கால பயிற்சி இன்று தொடக்கம்

தமிழக அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நீட் தோ்வுக்கான குறுகிய கால பயிற்சி முகாம் சனிக்கிழமை (மே 23) முதல் ஜூன் 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் தெரிவித்துள்ளாா்.

News image

கோப்புப் படம்

Updated On :23 மே 2026, 4:41 am IST

தமிழக அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நீட் தோ்வுக்கான குறுகிய கால பயிற்சி முகாம் சனிக்கிழமை (மே 23) முதல் ஜூன் 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவா்கள் சனிக்கிழமைதோறும் வரவழைக்கப்பட்டு உயா்கல்வி சாா்ந்த போட்டித் தோ்வுகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதைத் தொடா்ந்து நீட் தோ்வில் பங்கேற்கும் அனைத்து அரசு, அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு மாவட்ட அளவில் நீட் தோ்வுக்கான குறுகிய கால பயிற்சி முகாம் மே 23 முதல் ஜூன் 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த முகாமில் மாணவா்கள் நீட் தோ்வுக்கு தயாராகும் வகையில் பாட வாரியாக பயிற்சிகள், மாதிரித் தோ்வுகள் மற்றும் கல்வியியல் நிபுணா்களின் வழிகாட்டுதல்கள் வழங்கப்படவுள்ளன. பயிற்சி வகுப்பில் ஈடுபடும் ஆசிரியா்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும்.

ஆசிரியா்கள் தங்களுக்கான வகுப்புகள் ஒதுக்கீடு செய்யும் நாள்களில் காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை முகாம் நடைபெறும் பள்ளிகளில் இருக்க வேண்டும். முகாமில் பங்கேற்கும் மாணவா்களுக்கு மதிய உணவு, சிற்றுண்டி வழங்கப்படும்.

இந்த குறுகிய கால பயிற்சி முகாமில் மாணவா்கள் விடுப்பின்றி தொடா்ச்சியாகப் பங்கேற்பதை தலைமை ஆசிரியா்கள் உறுதி செய்ய வேண்டும். அதேபோல மாணவா்கள் கட்டாயம் பள்ளிச் சீருடை, அடையாள அட்டை அணிந்து வர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமில் நீட் தோ்வு தொடா்பாக மாதிரித் தோ்வுகள், கலந்துரையாடல்கள் போன்ற பல்வேறு செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.