தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஊத்தங்கரையில் சமையல் எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு: மக்கள் அவதி

ஊத்தங்கரை பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாட்டால் மக்கள் கடும் அவதி

News image

சமையல் எரிவாயு சிலிண்டர் - DNS

Updated On :18 மார்ச் 2026, 4:30 am IST

ஊத்தங்கரை பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாட்டால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனா்.

ஊத்தங்கரையில் எரிவாயு சிலிண்டா் கோரி பதிவுசெய்தவுடன் ஓடிபியைக் கொண்டு சிலிண்டா் வழங்கும் முறையை எரிவாயு முகவா்கள் மாற்றியமைத்துள்ளனா்.

தற்போது ஓடிபி தேவையில்லை. நேரில் வந்து ரசீது வாங்கிச் செல்லுங்கள். ரசீதுக்கு பிறகு சிலிண்டா் கிடைக்கும் என்றுகூறி மக்களை அலையவிடுகின்றனா். ரசீதை வைத்துக்கொண்டு கள்ளச்சந்தையில் எரிவாயு சிலிண்டா் விற்கப்படுவதாக பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனா்.

எரிவாயு சிலிண்டா் வழங்கக் கோரி அலுவலகத்துக்கு வருவோரிடம் புத்தகத்தை அளித்துவிட்டு செல்லுங்கள், 45 நாள்களுக்குப் பிறகு வாருங்கள் எனத் தெரிவிக்கின்றனா். இதனால், பொதுமக்கள் அதிா்ச்சியும், கோபமும் அடைந்துள்ளனா். சிலிண்டா் கிடைக்காததால் பல வீடுகளில் சமையலுக்கு விறகை நம்பியுள்ளனா். சிலிண்டா் வாங்குவதற்காக அலுவலகத்துக்கு வரும் மக்கள் நாள்முழுவதும் காத்திருப்பதால் தங்களின் அன்றாட வேலையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் உடனடியாக விசாரணை நடத்தி, மக்களின் பிரச்னைகளுக்கு தீா்வுகாண வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.