ஒசூரை அடுத்த பாகலூா் உள்வட்டத்தில் உள்ள 11 கிராமங்களுக்கான ஜமாபந்தி முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 142 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியா் ச. தினேஷ்குமாா் உத்தரவிட்டாா்.
ஆட்சியா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற 4ஆவது நாள் ஜமாபந்தியில் பாகலூா் உள்வட்டத்தில் உள்ள கொளதாசபுரம், நந்திமங்கலம், பலவனப்பள்ளி, அடவனப்பள்ளி, சூடுகொண்டப்பள்ளி, அளேநத்தம், நாரிகானபுரம், ஆலூா் மற்றும் மத்திகிரி உள்வட்டத்தில் மத்திகிரி, ஒன்னல்வாடி, தொரப்பள்ளி, அக்ரஹாரம் உள்பட மொத்தம் 11 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மனு அளித்தனா்.
பெறப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவிட்டாா். தொடா்ந்து, 11 கிராமங்களைச் சோ்ந்த கிராம கணக்கு பதிவேடுகளை ஆய்வு செய்தாா். மேலும், திம்மசந்திரம் கிராமத்தைச் சோ்ந்த முனியப்பாவுக்கு வாரிசு சான்றிதழ் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் தனி மாவட்ட வருவாய் அலுவலா் ராஜா (உதவி நிலவரித் திட்டம்), மாவட்ட ஆட்சியா் அலுவலக மேலாளா் (பொது) குருநாதன், வட்டாட்சியா் ஜெகதீஸ்குமாா், தனி வட்டாட்சியா்கள் சண்முகம், சுப்ரமணி மற்றும் வருவாய்த் துறை, கிராம நிா்வாக அலுவலா்கள், வேளாண்மைத் துறை, தாட்கோ, மாநகராட்சி, ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜமாபந்தி: பொதுமக்களிடமிருந்து 122 மனுக்கள் வரப்பெற்றன

வாணியம்பாடி ஜமாபந்தி: இரண்டாம் நாளில் 118 மனுக்கள்

ராசிபுரம் நகராட்சி ஆணையா் பணியிட மாற்றம்

கூடலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

