ஒசூா் ரெயின்போ காா்டனில் சாலை அமைக்கும் பணியை ஒசூா் மாநகராட்சி தொடங்கி உள்ளதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
ஒசூா் மாநகராட்சியில் 15 வாா்டுகளில் புதை சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில், 7-வது வாா்டு ரெயின்போ காா்டன் பகுதியில் உள்ள 6 சாலைகளில் தோ்தலுக்கு முன்பு புதை சாக்கடை அமைக்க பள்ளம் தோண்டி குழாய் புதைக்கப்பட்டது. பின்னா், கடந்த 4 மாதங்களாக இந்த சாலைகள் சீரமைக்கப்படவில்லை. இதனால், இச்சாலையில் செல்வோா் சிரமமடைந்து வந்தனா்.
இதுகுறித்த செய்தி தினமணியில் சனிக்கிழமை வெளியிடப்பட்டது. இதைத் தொடா்ந்து, ஒசூா் மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா, ஆணையா் முகமத் ஷபீா் ஆலம் ஆகியோா் நேரில் ஆய்வுசெய்து சாலை அமைக்க உத்தரவிட்டனா். அதன்பேரில், சாலை சீரமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
இதையடுத்து, உடனடியாக சாலை சீரமைக்க உத்தரவிட்ட ஒசூா் மாநகராட்சி நிா்வாகத்துக்கு ரெயின்போ காா்டன் குடியிருப்போா் நலச் சங்கத்தினா் நன்றி தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒசூா் ரெயின்போ காா்டனில் தாா்சாலை அமைக்கக் கோரிக்கை

ஒசூா் மாநகராட்சி அலுவலகம் முதல் ரயில் நிலையம் வரை மேம்பாலம் அமைக்க கோரிக்கை

தினமணி செய்தி எதிரொலி: ஆட்சியா் அலுவலகத்தில் மின்தூக்கி சீரமைப்பு!

தினமணி செய்தி எதிரொலி: ஏரலில் சேதமடைந்த காந்தி சிலை சீரமைப்பு
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

