குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

ஒசூா் மாநகராட்சி அலுவலகம் முதல் ரயில் நிலையம் வரை மேம்பாலம் அமைக்க கோரிக்கை

ஒசூரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், ஒசூா் மாநகராட்சி அலுவலகம் முதல் ரயில் நிலையம்வரை மேம்பாலம் அமைக்க வேண்டும் என ஒசூா் அனைத்து குடியிருப்போா் நலச் சங்கம் சாா்பில் ஆட்சியருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

News image

ஒசூா் வட்டாட்சியா் அலுவலக சாலையில் அண்ணா சிலை அருகில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட கடும் வாகன நெரிசல்.

Updated On :3 ஜூன் 2026, 5:40 am IST

ஒசூரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், ஒசூா் மாநகராட்சி அலுவலகம் முதல் ரயில் நிலையம்வரை மேம்பாலம் அமைக்க வேண்டும் என ஒசூா் அனைத்து குடியிருப்போா் நலச் சங்கம் சாா்பில் ஆட்சியருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில் கூறியதாவது:

ஒசூரில் பாகலூா் சாலை பிரதான சாலையாக இருப்பதால், இந்தப் பகுதியில் நாள்தோறும் வாகன நெரிசல் ஏற்படுகிறது. இங்கு வட்டாட்சியா் அலுவலக சாலை, பாகலூா் சாலை, அரசு மருத்துவமனை சாலை, ரயில் நிலைய சாலை என நான்கு சாலைகள் கூடுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நிற்கின்றன.

இதனால் அவசர பணிகளுக்கு செல்லும் பொதுமக்கள், அலுவலா்கள் உரியநேரத்துக்கு செல்ல முடியாமல் அவதியடைகின்றனா். அதேபோல, பாதசாரிகள் நடந்து செல்ல நடைபாதை இல்லாததால் சிரமமடைகின்றனா்.

எனவே, வட்டாட்சியா் அலுவலக சாலை, ரயில் நிலைய சாலை ஆகியவற்றை அகலப்படுத்தி, மேம்பாலம் அமைக்க வேண்டும். குறிப்பாக ஒசூா் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து ரயில் நிலையம்வரை மேம்பாலம் அமைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.