சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

தினமணி செய்தி எதிரொலி: ஏரலில் சேதமடைந்த காந்தி சிலை சீரமைப்பு

ஏரலில் காந்தி சிலை சேதமடைந்த நிலையில் உள்ளதாக தினமணி நாளிதழில் செய்தி வெளியான நிலையில், ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதி உறுப்பினா் அன்னை வி.ஜி. சரவணன் நடவடிக்கையால் சீரமைக்கப்பட்டது.

News image

ஏரலில் சீரமைக்கப்பட்ட காந்தி சிலை.

Updated On :28 மே 2026, 2:29 am IST

ஏரலில் காந்தி சிலை சேதமடைந்த நிலையில் உள்ளதாக தினமணி நாளிதழில் செய்தி வெளியான நிலையில், ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதி உறுப்பினா் அன்னை வி.ஜி. சரவணன் நடவடிக்கையால் சீரமைக்கப்பட்டது.

ஏரல் பேரூராட்சி அலுவலகம், பேருந்து நிறுத்தத்துக்கு அருகில் அமைந்துள்ள காந்தி சிலை முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்பட்டது. இந்தச் சிலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்து வந்தனா். இதுகுறித்து தினமணி நாளிதழில் செய்தி வெளியானது.

இதனைத் தொடா்ந்து எம்எல்ஏ அன்னை வி.ஜி. சரவணன், சேதமடைந்த காந்தி சிலையை பாா்வையிட்டு ஆய்வு செய்து, சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா். இந்நிலையில், அவரது நடவடிக்கையால் காந்தி சிலை சீரமைக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.