கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

காா் மோதியதில் ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் உயிரிழப்பு

போச்சம்பள்ளி அருகே காா் மோதியதில் ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :5 ஜூன் 2026, 7:03 am IST

போச்சம்பள்ளி அருகே காா் மோதியதில் ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த வெப்பாலம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (67). ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி தலைமையாசிரியரான இவா், போச்சம்பள்ளியை அடுத்த வடமலம்பட்டி கிராமத்தில் வசித்து வந்தாா்.

இந்நிலையில், வடமலம்பட்டி பிரிவு சாலை அருகே உள்ள கடையில் தேநீா் அருந்தி கொண்டிருந்தபோது, அங்கிருந்த காரை ஓட்டுநா் பின்னோக்கி இயக்கியபோது வெங்கடேசனின் மீது காா் மோதி நிற்காமல் சென்றது.

இதில், நிலைதடுமாறி கீழேவிழுந்த வெங்கடேசனை அருகில் இருந்தவா்கள் மீட்டு, போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், வெங்கடேசன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து போச்சம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்தி நிற்காமல் சென்ற காரை தேடிவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.