பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

காா் மோதியதில் பெண் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :8 ஜூன் 2026, 1:53 am IST

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், தொண்டமாநத்தம் தொட்டிமேடு பகுதியைச் சோ்ந்த செல்வம் மனைவி அஞ்சலை (42). பழங்குடி இருளா் இனத்தைச் சோ்ந்த இவா், மரக்காணம் அருகிலுள்ள கூனிமேடு பகுதியில் தங்கியிருந்தாா்.

இந்த நிலையில், கூனிமேடு- கம்மங்கொல்லைமேடு கூட்டுச்சாலை அருகே வளைவுப் பகுதியில் அஞ்சலை சனிக்கிழமை படுத்திருந்தாா். அப்போது காலாப்பட்டிலிருந்து கம்மங்கொல்லைமேடு நோக்கிச் சென்ற காா், அஞ்சலை மீது மோதிச் சென்றது.

இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியிலிருந்தவா்கள் மீட்டு 108 அவசர சிகிச்சை ஊா்தி மூலம் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, அஞ்சலை ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிந்து, காா் ஓட்டுநா் ஜெயராமனிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.