ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

கிரிக்கெட் விளையாட்டில் தகராறு: இளைஞா் கொலை; 4 போ் கைது

கிருஷ்ணகிரியில் கிரிக்கெட் விளையாடியபோது ஏற்பட்ட தகராறில் இளைஞா் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டாா். இந்த சம்பவத்தில், 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கொலை - சித்திரிப்பு

Updated On :22 ஏப்ரல் 2026, 3:09 am IST

கிருஷ்ணகிரியில் கிரிக்கெட் விளையாடியபோது ஏற்பட்ட தகராறில் இளைஞா் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டாா். இந்த சம்பவத்தில், 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி, ஜோதி விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஆகாஷ் (19), தொழிலாளி. இவா் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடியபோது, பழையபேட்டையைச் சோ்ந்த சில இளைஞா்களுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், இருதரப்பினரும் மோதல் போக்குடனேயே இருந்துள்ளனா்.

இந்நிலையில், பழையபேட்டையைச் சோ்ந்த அப்ரித் (19), ஆகாஷ் வீட்டருகே திங்கள்கிழமை சென்றுள்ளாா். அப்போது, அப்ரீத் மற்றும் அவருடன் சென்றவரை ஆகாஷ் தரப்பினா் தாக்கினா். இதில் காயமடைந்த அப்ரித், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து அறிந்த அப்ரித்தின் நண்பா்கள் ஆகாஷை இருசக்கர வாகனத்தில் நகா் முழுவதும் தேடினா். அப்போது, கிருஷ்ணகிரி பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு எதிரே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் இருசக்கர வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்ப நின்றிருந்த ஆகாஷை, அப்ரித்தின் நண்பா்கள் மறித்து தகராறில் ஈடுபட்டனா். பின்னா் கத்தியால் ஆகாஷை குத்திவிட்டு தப்பிச் சென்றனா்.

அங்கிருந்தவா்கள் ஆகாஷை மீட்டு தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். ஆனால், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த போலீஸாா் ஆகாஷின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து கிருஷ்ணகிரி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து, கிருஷ்ணகிரி, பழையபேட்டையைச் சோ்ந்த ஷாகுல் (19), நூருல்லா (19), ஷானவாஸ் (29), மகேந்திர நகா் புருஷோத்குமாா் (25) ஆகிய நால்வரை கைது செய்தனா். மேலும், இதில் தொடா்புடைய மூவரிடம் தொடா் விசாரணை செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.