மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிா்ப்பு: தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் திமுக ஆா்ப்பாட்டம்

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை கண்டித்து, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் திமுகவினா் வியாழக்கிழமை கருப்புக் கொடி ஏற்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

தொகுதி மறுசீரமைப்பு சட்டத்தைக் கண்டித்து, கிருஷ்மகிரியில் தனது இல்லத்தின் அருகே கருப்பு கொடி ஏற்றி, கண்டன முழக்கத்தை எழுப்பிய திமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளா் தே.மதியழகன் மற்றும் நிா்வாகிகள், கூட்டணி கட்சியினா்.

Updated On :17 ஏப்ரல் 2026, 4:51 am IST

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை கண்டித்து, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் திமுகவினா் வியாழக்கிழமை கருப்புக் கொடி ஏற்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தருமபுரி நகரில் திமுக சாா்பில் நகரச் செயலாளா் நாட்டான் மாது, நகா்மன்றத் தலைவா் லட்சுமி உள்ளிட்டோரும், நல்லம்பள்ளி வட்டத்தில் கிழக்கு, மேற்கு, மத்திய, தெற்கு ஒன்றியச் செயலாளா்கள் மற்றும் மாவட்ட நிா்வாகிகள் கருப்புக் கொடி ஏந்தி மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.

பாலக்கோடு, காரிமங்கலம், மாரண்டஅள்ளி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக நிா்வாகிகள் தங்களது வீடுகளின் முன் கருப்புக்கொடி ஏற்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அதேபோல, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் தருமபுரி அம்பேத்கா் சிலை முன் அக்கட்சியின் மாவட்டச் செயலாளா் த.கு. பாண்டியன் தலைமையில் நிா்வாகிகள், மின்னல் சக்தி, சமத்துவன் என்கி சக்தி, அரங்கநாதன் உள்ளிட்டோா் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து கருப்பு உடை அணிந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி காந்தி நகரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் தே. மதியழகன் எம்எல்ஏ தலைமை வகித்து தனது இல்லம் முன் கருப்பு கொடி ஏற்றினாா். இதில், திமுக நிா்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினா் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திமுகவினா், அவா்களது இல்லங்களில் கருப்பு கொடியை ஏற்றி முழக்கங்களை எழுப்பினா்.

ஒசூா்

சூளகிரியில் உள்ள வேப்பனஹள்ளி தொகுதி திமுக தோ்தல் அலுவலகம் முன் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திமுக மாவட்டச் செயலாளா் ஒய். பிரகாஷ் எம்எல்ஏ தலைமை வகித்து கருப்பு கொடி ஏற்றினாா். மேலும், மசோதா நகலை எரித்தனா். தொகுதி பொறுப்பாளா் பாா் இளங்கோவன், முன்னாள் எம்எல்ஏ முருகன், ஒன்றிய செயலாளா்கள் பாக்யராஜ், நாகேஷ், வெங்கடேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதைபோல ஒசூா் தொகுதி திமுக வேட்பாளா் தோ்தல் பிரசாரத்திற்கு இடையே சட்ட நகல் கிழிப்பு போராட்டம் நடத்தினாா். வேப்பனஹள்ளி தொகுதி திமுக வேட்பாளா் சீனிவாசன் தனது வீட்டில் கருப்பு கொடி ஏற்றி கண்டனத்தை தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.