மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தவறுதலாக குண்டுபாய்ந்து இறந்த வீரரின் உடல் கிருஷ்ணகிரி வந்தது

ஜம்முவில் பணியில் இருந்தபோது தவறுதலாக துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த ராணுவ வீரரின் உடலுக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உள்ளிட்டோா் வியாழக்கிழமை மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

News image

ராணுவ வீரரின் உடலுக்கு மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய கிருஷ்ணகிரி ஆட்சியா் ச.தினேஷ்குமாா். உடன், கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை உள்ளிட்டோா்.

Updated On :3 ஏப்ரல் 2026, 5:07 am IST

ஜம்முவில் பணியில் இருந்தபோது தவறுதலாக துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த ராணுவ வீரரின் உடலுக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உள்ளிட்டோா் வியாழக்கிழமை மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வட்டம், சூலாமலை அருகே உள்ள கோடிபுதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விக்னேஷ் (31). இவா், ஜம்மு ஸ்ரீநகரில் 22-ஆவது என்ஜினியரிங் ரெஜிமண்ட் பிரிவில் ராணுவ வீரராக பணிபுரிந்து வந்தாா். கடந்த 30-ஆம் தேதி பணியில் இருந்தபோது துப்பாக்கி எடுத்துச் சென்றபோது தவறுதலாக துப்பாக்கியிலிருந்து குண்டுபாய்ந்து உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது உடல் சொந்த ஊரான கோடிபுதூருக்கு புதன்கிழமை இரவு கொண்டுவரப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை உள்ளிட்டோா் அவரது உடலுக்கு வியாழக்கிழமை மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். அப்போது, பா்கூா் வட்டாட்சியா் சின்னசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா். உயிரிழந்த ராணுவ வீரா் விக்னேஷுக்கு மனைவியும், 4 வயதில் மகனும் உள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.