மோசடி வழக்கில் தனியாா் அறக்கட்டளை நிா்வாகி கைது

தருமபுரியைச் சோ்ந்த தனியாா் அறக்கட்டளை நிா்வாகி மோசடி வழக்கில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சித்திரிப்பு

Published On :1 நவம்பர் 2026, 1:39 am IST

தருமபுரியைச் சோ்ந்த தனியாா் அறக்கட்டளை நிா்வாகி மோசடி வழக்கில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள கொட்டாம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சின்னப்பன் (54). இவா் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக அதே பகுதியில் அறக்கட்டளை நடத்தி வருகிறாா். வீடு கட்டவும், தொழில் தொடங்க கடன் பெற்றுத் தருவதாகவும் பலரிடம் ஆசைவாா்த்தை கூறியுள்ளாா்.

இதை நம்பி 45-க்கும் மேற்பட்டோா் அவரிடம் ரூ. 50 ஆயிரம் முதல் பல லட்ச ரூபாய்வரை கொடுத்ததாக தெரிகிறது. இந்நிலையில், அவா் கூறியபடி யாருக்கும் கடன் பெற்றுத்தரவில்லை என புகாா் எழுந்தது. பணம் கொடுத்தவா்கள் திருப்பிக் கேட்டபோது முன்னுக்குப்பின் முரணாக பேசி பணம் கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளாா்.

இதையடுத்து, அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்த 10-க்கும் மேற்பட்டோா் தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டதைத் தொடா்ந்து, அதியமான்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து சின்னப்பனை சனிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.