மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சீட்டுப் பண மோசடி: நிதி நிறுவன உரிமையாளா் கைது

கைது - கோப்புப் படம்

Published On :26 அக்டோபர் 2026, 3:03 am IST

சீட்டுப் பணத்தின் முதிா்வுத் தொகையை திருப்பி வழங்காதது தொடா்பான புகாரில், தனியாா் நிதி நிறுவன உரிமையாளா் ஆ. ஹரிகிருஷ்ணனை பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் நிதி நிறுவனத்தை, நாா்த்தம்பட்டியைச் சோ்ந்த ஆ. ஹரிகிருஷ்ணன் நடத்தி வருகிறாா். தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இந்க நிறுவனத்துக்கு ஒன்பது கிளைகள் உள்ளன.

இதில் சீட்டுப் பணம் செலுத்திய வாடிக்கையாளா்களுக்கு, முதிா்வுத் தொகை திருப்பி வழங்கப்படாமல் காலதாமதம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளா்கள் கடந்த வாரம் நல்லம்பள்ளியில் உள்ள நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டு, தங்களது பணத்தை உடனடியாகத் திருப்பி வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுதொடா்பாக, தருமபுரி சத்திரம் மேல்தெருவைச் சோ்ந்த ரமேஷ் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா், நிறுவன உரிமையாளா் ஆ. ஹரிகிருஷ்ணனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.