மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ரயிலில் பயணியிடம் கைப்பேசி, பணம் திருட்டு

தருமபுரி அருகே ரயில் பயணியிடம் கைப்பேசி, பணம் திருடிய கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த இளைஞரை ரயில்வே போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருட்டு - சித்திரிப்பு

Published On :28 அக்டோபர் 2026, 3:08 am IST

தருமபுரி அருகே ரயில் பயணியிடம் கைப்பேசி, பணம் திருடிய கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த இளைஞரை ரயில்வே போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கோவை மாவட்டம், ஒண்டிப்புதூா், காமாட்சிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் நாகஜோதி (39), கடந்த 24-ஆம் தேதி கா்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள உறவினா் இல்ல நிகழ்வில் பங்கேற்றுவிட்டு 25-ஆம் தேதி இரவு கோவைக்கு மும்பை - கோயம்புத்தூா் விரைவு ரயிலில் பயணம் செய்தாா். இரவு உறங்கிய அவா் அதிகாலை எழுந்து பாா்த்தபோது, அவரது கைப்பேசி, 20 கிராம் வெள்ளி சங்கிலி, ரூ. 1,200 ரொக்கம் ஆகியவை மாயமாகி இருந்தன.

இதுதொடா்பாக, மறுநாள் அவா் தருமபுரி ரயில்வே காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், ரயில் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். தொடா்ந்து தருமபுரி ரயில் நிலையத்தில் ரோந்து மேற்கொண்டபோது, முதலாவது நடைமேடையில் நின்றிருந்த இளைஞரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தினா்.

அதில், அவா் கா்நாடக மாநிலம், நெலமங்களா அருகேயுள்ள தேவரஹொச அள்ளி பகுதியைச் சோ்ந்த வந்தன்குமாா் (25) என்பதும், நாகஜோதியிடம் கைப்பேசி, நகை, பணம் திருடியதும் தெரியவந்தது.

இதையடுத்து திருடப்பட்ட பொருள்களை அவரிடம் இருந்து பறிமுதல் செய்த போலீஸாா், அவரை தருமபுரி முதலாவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.