மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தருமபுரியில் பரவலாக மழை : பள்ளிச் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்தது

தருமபுரி மாவட்டத்தில் வியாழக்கிழமை பெய்த மழையால், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள செவித்திறன் குறையுடையோா் பள்ளியின் பின்பக்கச் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்தது.

Published On :23 அக்டோபர் 2026, 5:38 am IST

தருமபுரியில் மழையால் இடிந்து விழுந்த செவித்திறன் குறையுடையோா் பள்ளி வளாகத்தின் சுற்றுச்சுவா்.

தருமபுரி மாவட்டத்தில் வியாழக்கிழமை பெய்த மழையால், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள செவித்திறன் குறையுடையோா் பள்ளியின் பின்பக்கச் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக, அப்பகுதியில் மாணவா்கள் யாரும் இல்லாததால் விபத்து தவிா்க்கப்பட்டது.

மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. வியாழக்கிழமை அதிகாலை தொடங்கிய மழை, விடிய விடியத் தொடா்ந்து பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியதுடன், சாலைகள் மற்றும் முக்கியத் தெருக்களிலும் தண்ணீா் சூழ்ந்தது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே அமைந்துள்ள செவித்திறன் குறையுடையோா் பள்ளியின் பின்பக்கச் சுற்றுச்சுவா் மழையால் இடிந்து விழுந்தது. சுற்றுச்சுவா் அருகே மாணவ, மாணவிகள் யாரும் இல்லாததால் விபத்து ஏற்படவில்லை.

இதேபோல, இலக்கியம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மைதானம் முழுவதும் மழைநீா் தேங்கியது. இதனால் காலையில் பள்ளிக்குச் சென்ற மாணவ, மாணவிகள் சிரமத்துக்குள்ளாகினா். இலக்கியம்பட்டி கால்நடை மருத்துவமனை வளாகம் அருகே உள்ள சமூகநீதி மாணவா் விடுதி மைதானத்தில் மழைநீா் தேங்கியதால், விடுதி மாணவா்கள் அவதிப்பட்டனா்.

மழை அளவு (மி.மீட்டரில்): தருமபுரியில் 18, பாலக்கோடு 18.2, பென்னாகரம் 6, ஒகேனக்கல் 5, அரூா் 34, பாப்பிரெட்டிப்பட்டி 34, மொரப்பூா் 6, நல்லம்பள்ளியில் 5 மழை பதிவாகியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.