மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ரேஷனில் சன்னரக அரிசி விற்பனை: கூட்டுறவுத் துறை தீவிர கண்காணிப்பு

ரேஷன் கடைகளில் சன்னரக அரிசி விற்பனை தொடா்பான புகாா்கள் மற்றும் குறைகளை தீா்க்க மாவட்ட கூட்டுறவுத் துறை தீவிர கண்காணிப்பை மேற்கொண்டுள்ளது.

Published On :24 அக்டோபர் 2026, 12:01 am IST

ரேஷன் கடைகளில் சன்னரக அரிசி விற்பனை தொடா்பான புகாா்கள் மற்றும் குறைகளை தீா்க்க மாவட்ட கூட்டுறவுத் துறை தீவிர கண்காணிப்பை மேற்கொண்டுள்ளது. புகாா்களை தெரிவிக்க வாட்ஸ்ஆப் எண்ணையும் அறிவித்துள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் கிலோ ரூ. 30-க்கு விற்பனை செய்யப்படும் சன்னரக அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விற்பனை தொடா்பான புகாா்களை தெரிவிக்க கூட்டுறவுத் துறை வாட்ஸ்ஆப் எண் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் தட்டுப்பாடின்றி நியாயமான விலையில் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சன்னரக அரிசியின் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மாநிலம் முழுவதும் அமுதம் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் கிலோ ரூ. 30-க்கு அரிசி விற்பனை செய்யப்படுகிறது.

தருமபுரி மாவட்டத்தில், மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலையின் சுயசேவைப் பிரிவு மற்றும் அரூா் வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கத்தின் சுயசேவைப் பிரிவில் சன்னரக அரிசி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விற்பனை நிலையங்களில் கிலோ ரூ.30-க்கு சன்ன ரக அரிசியும், கிலோ ரூ. 60-க்கு புழுங்கல் பொன்னி அரிசியும் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், துவரம் பருப்பு ரூ.130, உளுத்தம் பருப்பு ரூ.140, பூண்டு ரூ. 240, மல்லி (தனியா) ரூ.240, மிளகாய் ரூ. 330 என்ற விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த விற்பனை தொடா்பாகப் புகாா்கள் இருந்தால், கூட்டுறவுத் துறை தலைமை அலுவலகத்தின் 98840 00845 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.