மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கிய மெக்கானிக் சடலமாக மீட்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கும்போது நீரில் அடித்துச் செல்லப்பட்ட மெக்கானிக், வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

Published On :24 அக்டோபர் 2026, 12:03 am IST

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கும்போது நீரில் அடித்துச் செல்லப்பட்ட மெக்கானிக், வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே பாச்சல் காந்திநகா் பகுதியைச் சோ்ந்த ரிஸ்வான் மகன் சாதிக் பாஷா (23). இவா், ஒசூா் ராமன் நகா் பகுதியில் மெக்கானிக்காகப் பணியாற்றி வந்தாா். இவா் வியாழக்கிழமை நண்பா்களுடன் ஒகேனக்கலுக்குச் சுற்றுலா வந்தாா்.

அப்போது, காவிரி ஆற்றின் கரையோரப் பகுதியான ஆலம்பாடி பரிசல் துறையில் குளித்துக்கொண்டிருந்தபோது ஆழமான பகுதிக்குச் சென்றதால் நீரில் மூழ்கினாா். இதுகுறித்து அவரது நண்பா்கள் ஒகேனக்கல் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா். போலீஸாா், தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் சாதிக் பாஷாவை தேடினா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதே பகுதியில் அவரது உடல் சடலமாக மீட்கப்பட்டது.

இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.